பாகம்..30

233 4 0
                                    

Episode.....30

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

       உங்களை  பார்க்கதான்...
வந்தோம்..
ஏன்  வர  கூடாத  என்றாள்...
  ஆயிஷா   சிரித்தவாறு....

   அட...
அப்படி  இல்லைங்க...
   ஆச்சரியமா  இருக்கு...
என்னை  கூட  பார்க்க  வருவதுற்க்கு...
   மனிதர்கள்...
இருக்காங்களே...
  என்று  நினைக்கும்போது...
பட்   சந்தோஷமா  இருக்கு...
   வினோத்  கூறவும்....

    சுவேதாவும்...
ஆயிஷாவும்  புன்னகைத்தனர்...

   ஆயிஷா  மட்டும்தான்...
வினோத்  கூட  ரொம்ப நாள்  பழக்கம்  போல்..
  சகஜமாய்  பேசினாள்...
சுவேதா...
   ஆயிஷாவுக்கு  பின்னால்  நின்று...
அவனை  பார்ப்பதும்  வெட்கபடுவதுமாய்  நின்றாள்....

   சரி...
வாங்க...
   வீட்டுக்கு  வந்தவங்கள..
வெளியே  வைத்து...
   பேசிட்டு  இருக்கேன்...
உள்ள  போய்  பேசுவோம்  வினோத்...
   இன்முகத்தோடு...
கூறவும்....

    பரவாயில்லை...
இப்படி  வெளியே  நின்று  பேசுறதும்...
   நல்லதான்  இருக்கு...
எவ்வளவு...
அமைதியான  இடம்...
   எவ்வளவு  அழகாயிருக்கு....
பூக்களையும்  ரசித்தவாறு...
    ஆயிஷா   கூறவும்....

  ம்.ம்...
அதுவும்  சரிதான்  என்றான்...
   சிரித்தவாறு....
பின்...
   சுவேதாவை  பார்த்து...
நீங்க   ஏன்   அமைதியாய்  இருக்கீங்க...
   முகமும்...
ஏதோ  மாதிரியிருக்கு...
   எதாவது  பிரச்சனையா  என்றான்  சட்டென....

   அதை  கேட்டதும்....
தூக்கிவாரிபோட்டது  சுவேதாவுக்கு...
   அவளுக்கு  மட்டுமல்ல  
ஆயிஷாவுக்கும்தான்.....

    எப்படி...
கண்டுபிடித்தான்...
   சுவேதா   எண்ணி  வியந்தாள்...
அந்த  வியப்பிலும்...
   அவளுக்கு  அவ்வளவு  சந்தோஷமாயிருந்தது....

     அந்த  விடயமதான்..
உங்களை  பார்க்க  வந்தோம்..
   ஆயிஷா  சட்டென  கூறவும்...

     என்ன...
சொல்லுறீங்க  ஒன்றுமே  புரியல...
   கொஞ்சம்...
தெளிவா  சொல்லுங்க  வினோத்  ஆச்சரியத்தோடு   கேட்டான்....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுDonde viven las historias. Descúbrelo ahora