Episode.....35
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
உடனே கோபத்தில் கரனை கீழே தள்ளி விட்ட ஆகாஷ்...
எடுங்கடா மோட்டார் பைக்கை என்று நண்பர்களிடம்...
கூறியவாறு...
தன் பைக்கையும் ஸ்டாட் பண்ணி கொண்டு...வினோத்...
நடந்த போன பக்கம்
வேகமாய் போனவன்...
வினோத் மிக அருகில் பைக்கை செலுத்தி...
பைக்கின்...
சத்ததை கூட்டினான் ...வினோத்...
எதுவுமே பண்ணவில்லை...
அமைதியாய்...
தன் போக்கில் நடந்தான்...ஆகாஷும் அவன் நண்பர்களும் விடுவதாயில்லை...
வினோத் வீடுவரை
அவனை சீண்டியவாறுதான் வந்தார்கள்...
அதுக்கும்
வினோத்
எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை...
அமைதியாய்...
தன் வீட்டுக்குள்
நுழையவும்...வாங்கடா....
இங்க தானே இவன் இருக்க போறான்...
பார்த்துக்கலாம்
என்ற ஆகாஷ் பைக்கை வேகமாய் திருப்பினான்...
அவன் பின்னால்
அவன் நண்பர்களும்...வினோத்...
வீட்டுக்குள் வந்து சட்டையை கழட்டி சுவற்றில் மாட்டியவன்...
இரவு உணவு செய்ய ஆயத்தமானான்...இங்கு...
கொஸ்டலில் சுவேதா நிலமையோ
பரிதாபமாயிருந்தது...வந்ததிலிருந்து...
சாப்பிடாமல் வினோத் வீடு போய் சேர்ந்தானா...
வழியில் எதாவது பிரச்சனை வந்ததோ...
பலவாறு யோசித்து
குழம்பிபோயிருந்தாள்...ஆயிஷா...
எவ்வளவு சொல்லியும் அவள் கேட்பதாயில்லை...ரொம்ப நேரமாகியும்..
அவள் சாப்பிடாமல் யோசிச்சுகிட்டு இருக்கவும்...
ஆயிஷாவுக்கு கோபம் வந்து...
அடி லூசு...
அவன் போய் சாப்பிட்டு நல்ல தூங்கியிருப்பான்...
நீதான்...
அதையே யோசிச்சுகிட்டு இருக்கிறாய்...
பேசாமல் போய்
சாப்பிட்டு வந்து தூங்கு...
இல்லை என்றால் இப்போ என்கிட்ட ஏச்சு வாங்குவாய்
சொல்லிட்டேன்....
கோபமாய் பேசினாள்....