Episode.........84
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
அப்போதுதான்...
வாய் தடுமாறி உளறி விட்டதை ஆயிஷா
உணர்ந்தாள்...இனி..
மறைத்து பலனில்லை என்று
நினைத்தவள்...
ம்.ம்...
உண்மைதான் நிரோ...
என்றவும்...இப்போது..
கூட நிரோவால்...
நம்பமுடியவில்லை...என்னக்கா...
திடிரென்று இப்படியொரு குண்டை தூக்கி போடுறீங்க...
இந்த உண்மையை இப்போ வந்து
சொல்லுறீங்க...
நிரோ...
உடைந்துபோய் கேட்டாள்....வினோத்...
இப்படி சொல்லுவார் என்று...
நானும்
எதிர்பார்க்கல...
பட்
அவர் சொன்ன காரணம் சரியானது...
சுவேதா...
வீட்டுக்கு செல்லமான பொண்ணு...
அவங்க...
அப்பா அம்மாவின் கனவு...
அவங்கள ஒரு டாக்டர் ஆக்கி பார்க்கனும் என்றுதான்...
அதை தான் கெடுக்க மாட்டேன்
என்று...
சொன்னாரு...
அதோடு
தன்னை மாதிரி
ஒரு அனாதையை அவங்க பாமிலியும்
ஏற்றுக்காது ...
தான் சுவேதாவுக்கு
சரியான துணை இல்லை என்றும்
சொன்னாரு...
அதுக்கு பிறகும் என்னால் பேச முடியவில்லை....அப்போ..
இந்த விடயத்தை அக்காவிடம்...
சொல்லியிருக்கலாமே...
என்றாள் நிரோ...
கலங்கியவாறு...எப்படி...
சொல்லுறது
அந்த நேரம்
சுவேதா மனசு முழுவதும்...
வினோத்...
மட்டும்தான் இருந்தாரு...
அப்படி வினோத் சொன்னார் என்று
அவளுக்கு தெரிந்திருந்தால்...
ரொம்ப உடைந்து போயிருப்பாள்...
கொஞ்சநாள் போக...
உண்மையை சொல்லவிடலாம் என்று
நினைத்தேன்...
ஆனால்...
இப்படி வந்து நிற்கும் என்று.....
யாருக்கு தெரியும்....ஆயிஷக்கா...
நீங்க சொல்லுவதெல்லாம் கேட்கும்போது
எனக்கு...
அழுகையே வருது...
இப்போ...
இந்த உண்மை அக்காவுக்கு தெரியனும்...
ஐயோ...
நினைத்தாலே...
பதறுது...
அவள் தாங்கமாட்டாள்....ம்.ம்
நானும் அதை தான் யோசிக்கிறேன்...ஆயிஷக்கா...
ஏதாவது பண்ணுங்க...
எல்லாம்
உண்மை என்று நினைத்து
வினோத்தை தேடி போயிருக்கிறாள் அவள்....
