Episode......40
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
என்னை எங்கு பார்த்திங்க...
என் வாய்ஸ் பற்றி...
எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க...
வினோத்..
ஆச்சரியமாய் அந்த பெண்ணை திரும்பி பார்த்து கேட்டான்.......அதுவா...
என் பேரு சுமித்ரா...
நான் இந்த ஊரில ஒரு ஆட்ஸ் காலேஜில்தான் படிக்கிறேன்.....
ஒருதடவை...
நீங்க ஓர் இடத்தில ஆர்மோனியபெட்டி வாசித்து பாடியதை பார்த்திருக்கிறேன்.........
ரொம்ப பிடிச்சிருந்தது அதை வீடியோ பிடிச்சு...
வைச்சிருந்து என் பிரண்ட்ஸ் எல்லோருக்கும்....
காட்டினேன்....
அவங்க எல்லாம் அதை ரசித்து உங்களை மீட் பண்ணனும்
என்று ஆசைப்பட்டாங்க...
அவள் சொல்லி முடிக்கவும்....ஓஓ...
அப்படியா என்று மௌனமாய் சிரித்தான் வினோத்....ஒரு ஒரிஜினல் சிங்கரை விட நீங்க நல்லா பாடுறீங்க...
ஏன் ஒரு சிங்கரா வர
ரை பண்ண கூடாது....அவ்வளவு...
ஆசையெல்லாம் இல்லை எனக்கு...
என்று
அப்போதும்
அமைதியாய் சிரித்தான் வினோத்....பின்னாலிருந்த...
ஆயிஷாவுக்கு சுவேதாவுக்கும் இவர்கள் பேசுவது...
தெளிவாய் கேட்டது....என்னடி...
வினோத்தின் பாட்டுக்கு நீ மட்டும்தான்...
ரசிகை என்று பார்த்தால்...
உலகம் முழுதும் ரசிகைங்க இருக்காங்க போல...
ஆயிஷா கிண்டலாய்...
கூறவும்....சும்மா வாயை வைச்சிட்டு இரு....
நானே கடுப்பில இருக்கேன்...
சுவேதா கோபமாய் முணுமுணுத்தாள்...நீ இப்படியே...
தூரத்தில் நின்றே ரசிச்சுகிட்டு இரு...
இன்னொருத்தி வந்து...
காலம் முழுதும் அவன் பக்கத்தில்
உட்கார தான் போறாள்....
அப்போ பீல் பண்ணு....
என்றாள் ஆயிஷா....அதை கேட்டு சுவேதா மௌனமாய்...
மனதுக்குள்
அப்படி ஏதுவும் நடந்துவிட கூடாதென்றும் எண்ணினாள்.....
