Episode.....22
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
என்னடி...
உன் ஆளை பார்த்திட்டு வந்ததிலிருந்து...
ஒரே லவ் மூட்ல இருக்கிறாய்...
வெளியே போட்டுகொண்டு போன றெஸ்ட் கூட இன்னும் மாற்ற மறந்து...
சரி நடக்கட்டும் என்றாள் நக்கலாய்..
ஆயிஷா...போடி பக்கி...
எப்ப பாரு
சும்மா எதையாவது கற்பனை பண்ணிகிட்டு...
மனிசர் அலுப்பில படுத்திருக்கிறாங்க..
இதில நீ வேற என்று...
செல்லமாய் கோபம் கொண்டாள் சுவேதா...
ஆனால்
அவள் மனதில் வினோத் முகமே ஓடிக்கொண்டிருந்தது....சரி...
இதையே எத்தனை நாளைக்கு சொல்லிகிட்டு...
இருக்கிறாய் என்று பார்ப்போம் என்றாள் ஆயிஷா...
மேசை மீது ஏதோ தேடியவாறு.....அப்போது...
மேசை மீதிருந்த சுவேதாவின் மொபைல்
சிணுங்கியது...உடனே..
அதை கையில் எடுத்த ஆயிஷா...
மச்சி...
வாலு என்று பெயர் வருது நிரோவா எடுக்கிறாள்...
என்று சுவேதாவை பார்த்து கேட்க்கவும்....சுவேதாவும்....
படுத்திருந்தவாறே....
ஆமாடி அவள்தான்...
இங்க போனை கொடு என்று கையை நீட்டினாள்.....ஆனால்...
ஆயிஷா மொபைலை அவளிடம் கொடுக்காமல்...
தானே ஆன்சர் பண்ணி...
சொல்லு வாலு என்றாள்....ஹாய்..
ஆயிஷாக்கா நீங்களா...
அக்கா எங்க போய்ட்டாங்க என்றாள் நிரோ....உன் கொக்கா....
ரொமான்ஸ் மூட்ல இருக்கிறாங்க...
இப்ப யார் கூடவும் பேசுற நிலையில இல்லை என்று சுவேதாவை பார்த்து சிரித்தாள் ஆயிஷா....உடனே...
சுவேதா கட்டிலிருந்து எழுந்து வந்து
ஆயிஷாவிடம்
லூசு போனை கொடு என்று பிடுங்கினாள்...ஆயிஷா கொடுக்கவில்லை....
என்னக்கா...
சொல்லுறீங்க என்று நிரோ ஆச்சரியபடவும்...அதுவா....
இங்க ஒரு லவ் படமே ஓடுது...
நீ அதை மிஸ் பண்ணுறாய்...
உனக்கு லக் இல்லை என்று கிண்டலாய் நிரோவிடம்
ஆயிஷா கூறிக்கொண்டிருக்கும்போது...
சுவேதா...
அவளிடமிருந்து போனை பிடுங்கிவிட்டாள்.....
