பாகம்..31

210 6 0
                                    

Episode....31

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

        ம்.ம்...
இப்படி  சிரிக்கும்  போது...
   எவ்வளவு  அழகாயிருக்கு  தெரியுமா...
இப்படியே..
  இருங்க  ஒரு  கவலையும்  தேவையில்லை...
     நாங்க  இருக்கிறோம்...
    எல்லாம்  பார்த்துக்கிறோம்...
என்றான்...
   வினோத் 
சுவேதாவை  பார்த்து...

    அந்த  வார்த்தையில்...
ஒரு  பாதுகாப்பையும்  ஒரு  அரவணைப்பையும்  கண்டாள்  சுவேதா  அந்த  நொடி...

    அப்படியே...
புன்னைகத்தவாறு  அருகில்  நின்ற...
   ஆயிஷா  மீது  
மெல்ல  சாய்ந்தாள்   சிறு  வெட்கத்தோடு...

   பார்டா...
என்னடா  நடக்குது  இங்க...
    இவ்வளவு  நேரம்  நானும்  சொல்லிதான்
பார்த்தேன்...
   முகத்தை  தூக்கி  வைச்சுகிட்டே  இருந்துவிட்டு...
   இப்ப  இவரு  சொன்னதும்...
சிரிக்கிறாங்களாம்...
  ஆயிஷா  நக்கலாய்  கூறவும்...

     சுவேதா...
சிறு பிள்ளைபோல்  சிணுங்கியவாறு
  ஆயிஷாவின்...
கைகளை  கிள்ளினாள்...
   வெட்கமும்  மலர்ந்தது  அவள்  முகத்தில்...

    வினோத்துக்கு...
ஆயிஷா  கூறியது  அதிசயமாயிருந்தது...
   இருந்தும்...
அதை  ரசித்தான்...
   மெல்லிய  புன்னகையோடு....
 
    ஏதோ   அவனுக்கும்...
சுவேதா  மீது  ஒரு  பிடிப்பு...

   அப்பாடா...
இப்பதான்  கொஞ்சம்  நிம்மதியாயிருக்கு...
   தாங்ஸ்...
ரொம்ப  பயந்திட்டு  இருந்தேன்
   இப்ப  கொஞ்சம்  மனசும்  ரிலாக்ஸா  இருக்கு...
என்றாள்  சிரித்துக் கொண்டு   நின்ற  வினோத்தை  பார்த்து  ஆயிஷா....

   இப்ப  தாங்ஸ் எல்லாம்  எதுக்கு...
அதுசரி...
   கொஸ்டலில் இருந்து...
காலேஜிக்கு  பஸ்சில்  தானே  போறனீங்க..
   என்றான்
ஆயிஷாவை  பார்த்து வினோத்..

   ம்.ம்..
என்று  ஆயிஷா  தலையசைக்கவும்...

   என்ன..
டைம்  கொஸ்டலிருந்து  கிளம்புவீங்க...
   மோர்னிங்...
என்றான்  வினோத்  மறுபடியும்....

   மோர்னிங்
எட்டுமணிக்கு பின்புதான்...
    என்ற  ஆயிஷா...
ஏன்  கேட்கிறீங்க  என்றாள்....
  வினோத்தை  பார்த்து  வியப்பாய்..

இருளில்  வந்தது  ஒரு  நிலவுDonde viven las historias. Descúbrelo ahora