பாகம்..85

131 4 0
                                    

Episode...........85

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

      உண்மைதான்....
மச்சான்
அவள்   டாக்சியில்   ஏறி  போவதை...
    என்  இரண்டு  கண்களாலும்   பார்த்தேன்....
    என்றான்   ஆகாஷின்
அந்த   கூட்டாளி....

    சரி  சரி...
அப்போ   இன்றைக்கு  அந்த  வினோத்துக்கு
   ஒரே   விருந்துதான்...
ஆகாஷோடு  குடித்துக்கொண்டிருந்த  
   அவனின்  நண்பன்
கரன்  குடி  போதையில்   நக்கலாய் சொல்லவும்......

   என்னடா...
உளற   ஆகாஷ்  உறுமினான்...

    அவன்...
தனியே  வேறு  இருக்கிறான்...
   இவளும்...
அடிக்கடி  அவன்  வீட்டுக்கு  போய்  வந்திருக்கிறாள்.....
   இரண்டு  பேருக்கு  நடுவில்  எதுவும்  நடந்திருக்காமல்  இருக்குமா....
   பஞ்சும்  நெருப்பும்...
பக்கத்தில்   இருந்தால்  பத்திக்கதான்
   செய்யும்...
என்றான்
   கரன்  குடிபோதையில்....

நண்பன்  சொல்வதை  கேட்டு
ஆகாஷ்....
   ஒரு  வெறி  பிடித்த  மிருகம்  போல்  உரு  மாறினான்...

   மச்சான்...
அந்த  ஏமாற்றுக்காரி  உனக்கு
   தேவை  தானா...
உலகத்தில்
   எத்தனையோ  பிகருகள்  இருக்க  அவளை  மட்டும்  ஏன்டா  துரத்திறாய்......
என்றான்...
   இன்னொருவன்....

   டேய்...
நான்  அவளை  கல்யாணம்  பண்ணிக்க  ஆசைப்பட்டதே...
   ஒருநாள்   அவளை  அனுபவிச்சிட்டு...
தூக்கி  எறிய  தான்....
   அதை...
இப்பவே  பண்ணுறேன்    என்று  கொடூரமாய்..
வார்த்தைகளை  உதிர்த்த     ஆகாஷ்.....
  
    எடுடா...
வண்டியை   என்று...
   தன்  நண்பன்  ஒருவனை  பார்த்து  கத்தினான்........

உடனே...
   அவன்  கூட்டாளி  காரை  ஸ்டாட்  பண்ணவும்....
   ஆகாஷ்   காரில்  வந்து
ஏறிக்கொண்டான்   அவனோடு  அவன்   கூட்டாளிகளும்தான்....

    வண்டி...
மின்னல்  வேகத்தில்  வீதியில்  பறந்தது...

நடக்க  போவதை  அறியாமல்
இங்கே...

   ஆமை  வேகத்தில்...
டாக்சி  போய்க்கொண்டிருந்தது...
   சுவேதா...
வினோத்தை  காணும்  ஏக்கத்தோடு   சீட்டோரம்...
    சாய்ந்திருந்தாள்....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now