Episode......53
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
மாதவியோடு...
பேசிகிட்டு இருந்த வினோத்...
நதிக்கரையிலிருந்து மூவரும்...
வருவதை பார்த்துவிட்டு....அன்ரி...
அவங்க வாறங்க என்றான்...மாதவியும் திரும்பி பார்த்தார்...
அப்போது...
அவர்கள்
அருகே வந்துவிட்டார்கள்...என்ன செய்தீங்க
அங்கே நின்று இவ்வளவு நேரம்...
என்று மாதவி வந்தவுடன்...
கேட்கவும்....அந்த...
இடத்துக்கு போனதும் திரும்பி வரவே
விருப்பமில்லாமல்
இருந்தது...
அதுதான்ம்மா...
கொஞ்சம் டைம் நின்றுவிட்டு வந்தோம்...
என்று...
கூறிய நிரோ தாயின் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டாள்....அப்போது...
வினோத் அங்கிருந்து எழுந்திருக்கவும்...
ஏன்...
எழுந்தீங்க
உட்காருங்க என்றாள் ஆயிஷா...இல்லை...
பரவாயில்லை நீங்க உட்காருங்க ...இவ்வளவு...
நேரம் பேசிகிட்டு இருந்தீங்க
எங்களை கண்டது எழுந்துவிட்டீங்க...
அப்போ...
நாங்க அந்த பக்கம் போறோம் நீங்க உட்கார்ந்து...
பேசுங்க என்று ஆயிஷா...
மறுபடியும்
கிண்டல் பண்ணவும்....சீ.சீ
அப்படி எல்லாம் இல்லை...
எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு...
நீங்க உட்கார்ந்து
பேசிட்டு இருங்க நான் வேலையை முடித்துவிட்டு....
வாரேன்...
என்றவன்...
வீட்டினுள் போனான்....அவன்...
போனதும்...
நிரோ ஏதோ ஆவலில்....
தாயின் கன்னத்தை பிடித்து
அம்மா....
வினோத் ப்ரோ கூட என்ன பேசிட்டு இருந்தீங்க..
என்றாள்....ரொம்ப...
நல்ல பையன்
என்ன...
மாதவி அவன் போன திசையை பார்த்தவாறு
சொன்னார்.....ஒருநொடியில்....
சுவேதா உள்ளம் குளிர்ந்து போனது....என்னம்மா...
நான் கேட்டது என்ன பேசிட்டு இருந்தீங்க
என்று...
நீங்க ஒரு வார்த்தையில்....
இப்படி சொல்லுறீங்க....