Episode.....26
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
அந்த பிஞ்சு குழந்தைகளின் ஆசையை வினோத்தால்...
மறுக்க முடியவில்லை....சரிமா...
நான் பாடுறேன் என்றவன்...
அந்த முதியவர் சற்று தள்ளி இடம் கொடுக்கவும்...ஆர்மோனியபொட்டியின்...
முன்னால்
அமர்ந்தான்...அதை...
பார்த்திருந்த சுவேதாவின் விழிகள்...
வியப்பில் ஆழ்ந்தன...
அவள்...
எண்ணத்தில் ஆயிரம் ஆவல்கள்...
அவன் புல்லாங்குழல் மட்டும்தானே...
வாசிப்பான்...
என்று நினைத்திருந்தாள்...
அவனுக்கு பாட வேறு தெரியுமா என்று எண்ணும்போதுதான்...
அவள் மனசு ஆசையில் படபடத்தது...
வைத்த...
கண் வாங்காமல் அவனையே பார்த்திருந்தாள்....கடவுளே...
பஸ் இப்போது வரக்கூடாது...
என்று...
அவள் உள்ளம் நினைத்தது...ஆர்மோனியபெட்டி...
முன் அமர்ந்த வினோத்...
மெதுவாய் இமைகளை மூடி
அதை இசைத்தவாறு...
இதமாய்...
ஒரு பாடலை பாடினான்...உண்மையில்...
அவன் குரலில் ஒரு இனிமை ஒரு ஈர்ப்பு...
அங்கு...
நின்றவர்கள் எல்லாம்....
அவன்...
பக்கம் திரும்பி பார்க்க வைத்தது...
சுவோதாவோடு...
நின்ற தோழிகளை கூட...அடி...
நம்ம வினோத்...
சுவேதாவின் தோழிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்....சுவேதாவை...
சொல்லவே வேண்டாம்...
அவன் பாட தொடங்கவும்...
தன்னையே மறந்துவிட்டாள்...
அத்தனை...
சந்தோஷம் அவள் விழிகளில்....சுவே...
வினோத்துக்குள்ளும் இப்படி ஒரு திறமையிருக்கா...
பக்கத்தில் நின்ற...
ஆயிஷா கேட்டது கூட சுவேதா காதில் விழவே இல்லை....சற்று தொலைவில்...
நின்ற ஆகாஷ் வெந்துகொண்டிருந்தான்...
வினோத்...
பாடுவதை தன்னை மறந்த ரசித்த சுவேதாவை பார்க்கும்போது...
அவனால் பொறுக்க முடியவில்லை.....
![](https://img.wattpad.com/cover/220873119-288-k938448.jpg)