Episode........49
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
இல்லை பரவாயில்லை...
சொல்லுங்க..
தப்பா நினைக்கிற அளவுக்கு நீங்க அப்படி...
கேட்க போறீங்க..
என்றாள் ஆயிஷா...
ஆச்சரியமாய் வினோத்தை பார்த்து....எப்படி...
அதை கேட்பதென்று ஒருநொடி...
யோசித்துவிட்டு...
அடுத்த நொடி கொஞ்சம் தயக்கத்தோடு...
மாதவியை பார்த்து
கேட்டான் வினோத்...அன்ரி உங்களுக்கு...
ஆட்சேபனை இல்லை என்றால்
என் வீட்டில் வந்து தங்கிட்டு காலையில் போகலாமே
என்று...அதை...
கேட்டதும் மாதவி...
ஆச்சரியமாய்
என்னப்பா இதை சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம்...
இதில் தப்பா நினைக்க என்ன
இருக்கு....
சந்தோஷமான விடயம்தானே...அதுதானே...
இவ்வளவு சந்தோஷமான விடயத்தை...
உரிமையாய்
கேட்கனும்...
ரொம்ப தாங்க்ஸ் வினோத்...
என்றாள் ஆயிஷா...
இதை அவள் யோசிக்கவே இல்லையே..சுவேதாவின்...
சந்தோஷத்தை சொல்லவே வேண்டாம்...
அப்படியொரு சந்தோஷம்
முகத்திலும் உள்ளத்திலும்.....
யாரோ...
பூக்களை அவள் மேல் அள்ளி கொட்டுவதுபோல்...
தேகம் சிலிர்த்தாள்....எதிர்பார்க்காத ஒன்று
நடந்தால்
எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்...
அந்த நிலையில்தான்
அவளிருந்தாள்...நிரோவுக்கும்....
ரொம்ப சந்தோஷமாயிருந்தது...
அந்த சந்தோஷத்தோடு...
தமக்கையின்
முகத்தில் ஓடிய சந்தோஷங்களை ரசித்தாள்......இன்னொரு...
விடயம் வினோத் முடிக்காமல் இழுக்கவும்..என்னப்பா...
என்றார் மாதவி...இல்லை...
அன்ரி...
என் வீட்டில் அவ்வளவு வசதியிருக்காது...
ஒரு சின்ன குடிசை மாதிரிதான்...
தரையில்தான்
தூங்கனும்...
அதுதான் கேட்கவே தயங்கினான்
பட்..
இந்த டைம் நீங்க
வேற எங்க போவீங்க...
அதுதான்...
மனசை விட்டு கேட்டேன்...