பாகம்..78

137 4 0
                                    

Episode..........78

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

    சந்திரசேகர்....
வெளியூரில்  இருந்து  வந்ததும்...

   சுவேதாவுக்கு...
மாப்பிள்ளையை  பார்த்து  முடிவு  செய்துவிட்டு   வந்ததை  உடனே  வீட்டில்  கூறவில்லை....

எப்படியோ
  ஒரு....
வாரம்   நகர்ந்தது...

  அப்போது...
ஆகாஷின்  தந்தை  பாலசந்திரன்...
    நிச்சயார்த்ததுக்கு   ஒரு  நல்ல  நாள்  பார்த்து  முடிவு  பண்ணிவிட்டு...
    சந்திரசேகருக்கு  கோல்  பண்ணி  சொன்னார்.....

இரவு...
  மனைவியோடு
   ஹாலில்...
கதைத்துக்கு  கொண்டிருக்கும்போது...
    சந்திரசேகர்...
அந்த  கதையை  தொடக்கினார்....

   அவர்களோடு...
அங்கே   சுவேதாவும்  நிரோவும்
    இருந்தனர்....

சாதாரணமாய்....
பேசிட்டு  இருந்தவர்...
    சுவேதாவை  பார்த்து
உனக்கு   ஒரு  பையனை  பார்த்து  முடிவு  பண்ணிட்டேன்...
   என்  பழைய  நண்பன்  ஒருவரின்  பையன்தான்...
வரும்  இருபதாம்  திகதி...
   உனக்கு  நிச்சயார்த்தம்...
என்று...
   சட்டென  கூறவும்....

சுவேதா....
அப்படியே  நொருங்கிபோனாள்....
   அவள்...
தேகம்  உணர்ச்சி  இழந்தது...
   விழிகள்...
அச்சத்தில்   படபடத்தது.....

   நிரோவும்...
உணர்ச்சிகள்  இல்லாத  பொம்மை  போல்  உறைந்து  போயிருந்தாள்.....

    கணவர்...
சொன்னதை  கேட்டு  அதிர்ச்சியடைந்த  மாதவி....
   கொஞ்சம்...
நிஜத்துக்கு  வந்து....

   என்னங்க...
சொல்லுறீங்க....
   ஒரு  வார்த்தை   கூட  சொல்லாமல்...
திடீரென்று....

    சஸ்பன்ஸா  இருக்கட்டும். .
என்று...
சொல்லவில்லை...
   அவன்...
நல்ல  பையன்தான்....
    அவனும்...
  டாக்டர்க்கு  தான்  படிச்சிட்டு  இருக்கிறான்....
இவள்...
   படிக்கிற  காலேஜ்தான்....
பெயரு  ஆகாஷ்....

   அதை  கேட்டதும்...
என்னது...
   ஆகாஷா...
மனதளவில்  முழுதாய்  மரணித்துவிட்டாள்  சுவேதா....
  அவளிடம்   நேற்றிருந்த  சந்தோஷங்கள்...
எங்கோ  போனது......
   வார்த்தையில்...
சொல்ல  முடியாத   உணர்வுகள்   அவள்  உள்ளத்தில்...
    புழுவாய்  துடித்தாள்....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now