🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
Episode.......10
சுவேதா பயந்துபோய் விழிக்கவும்...
உனக்கு சொல்லுறது காதில் விழவில்லையா...
சீக்ரம் போய் அவன் மொபைல் நம்பரை வாங்கிட்டு வா...
அந்த சீனியர் கோபமாய் கூறினான்...ஆயிஷாவும் பயந்துவிட்டாள்
எதிர்த்து பேசவும் முடியவில்லை....சுவேதா...
நடுங்கியவாறு
மெதுவாய் தொலைவில் வந்து கொண்டிருந்தவனை நோக்கி நடந்தாள்...அந்த ஆண் முன்னால்
போய் நின்று
தரையை பார்த்தாள்..
அங்கே வந்தவன்
எதுவும் புரியாமல் ஆச்சரியமாய் இவளை பார்த்து நின்றான்...சுவேதா...
சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
அவனை பார்த்து
உங்க மொபைல் நம்பர்
என்ன என்று கேட்டாள்
அப்படி கேட்கும்போது அவள் உள்ளம்
அவ்வளவு வலி சுமந்தது....அந்த ஆண்
அவளை வியப்பாய் பார்த்தான்
அவனால் அதை நம்ப முடியவில்லை...
இவள்
அழகுக்கு நாங்கதான் இவள்கிட்ட நம்பர் வாங்கனும்...
இவள் என்னடா என்றாள்
எங்கிட்ட நம்பர் கேட்கிறாள் என்று
தனக்குள்ளே
பெருமைபட்டவாறு
தன் பக்கத்தில் நின்ற தன் நண்பனையும் ஆணவமாய்
பார்த்துவிட்டு...
உடனே தன் மொபைல் நம்பரையும் சொல்லிவிட்டான்....சுவேதா...
அதை கேட்டுவிட்டு கூச்சத்தோடு
அங்கிருந்து நகர்ந்தாள்....நம்பர் கொடுத்தவன்
அவள் போன திசையை பார்த்து நிற்க்கவும்
அவனோடு நின்ற அவனின் நண்பன்..டேய்...
மச்சான் உனக்கு
எங்கையோ மச்சமிருக்கு...
அழகான பொண்ணுங்க எல்லாம்
உங்கிட்ட நம்பர் வாங்க லைனில் வாரங்க சொல்லி சிரித்தான்.....நாங்க யாரு
என்றான் பெருமையாய் நம்பர் கொடுத்தவன்....ஆமாம்...
இவன் பெயர் ஆகாஷ்
பெரிய வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த இவனோடு
ஆணவமும் பிடிவாதமும் கூடவே பிறந்தது
நினைத்ததை எப்படியாவது
அடைந்தே தீருவான்
இல்லை என்றால் அதை அழித்துவிடுவான்
இவனும் இந்த கதையில் முக்கியமானவனே.....
