Episode.......83
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
என்ன சொல்லுறாய்...
டாட் மாம் க்கு தெரியாமல்
வீட்டை விட்டு போக சொல்லுறியா...
என்றாள்
சுவேதா...உன்னை..
நிரந்தரமாய் போக சொல்லவில்லை...
போய்...
வினோத் கூட பேசி
ஒரு முடிவெடுத்துவிட்டு வா...
இப்படி...
ஆளுக்கொரு திசையில்...
சம்மந்தமில்லாமல் இருப்பதால்..
ஒரு முடிவும்
கிடைக்காது என்று நிரோ கூறவும்...சுவேதா...
விழிகளை துடைத்தவாறு யோசித்தாள்...என்ன
சொல்லிட்டு கிளம்பி போறது...
அதோடு...
என்னை தனியே போகவும்...
விடமாட்டார்...
டாட்...ஏதாவது...
ஒரு காரணத்தை சொல்லிட்டு கிளம்பி போ...
நீ தனியே போகல
உன் பிரண்ட் கூட போறேன் என்று...
சொல்லு..
என்றாள் நிரோ...அவள்..
சொல்வது சரியென தோன்றியது சுவேதாவுக்கு...
தாங்க்ஸ் செல்லம்...
என்றாள்
பக்கத்தில் படுத்திருந்த தங்கையை கட்டியணைத்து.....சரி அக்கா..
இப்போ போய் முகத்தை வோஷ் பண்ணிட்டு...
வந்து யோசிக்காமல் தூங்கு என்று நிரோ சொல்லவும்....சுவேதா...
எழுந்து வோஷ் ரூம் போனாள்...அடுத்தநாள்...
காலை சந்திரசேரிடம்..
டாட்...
அக்கா வெளியூர்ல இருக்கிற அவள் பிரண்ட்...
வெடிங்க்குக்கு போகனுமாம்...
என்று...
நிரோ கேட்டாள்....தனியே...
எங்கும் போகவேண்டாம்...
என்று
சந்திரசேகர் மறுத்துவிடவும்...இல்லை...
டாட் அவள் பிரண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்துதான்
போறாங்க...சரி...
போய்ட்டு உடனே வரச்சொல்லு...
என்று கூறிவிட்டு...
வெளியே கிளம்பினார்
சந்திரசேகர்....மாதவிக்கோ...
சந்தேகமாயிருந்தது...
நேற்று முழுவதும் அழுதிட்டு இருந்தவள்
திடீரென்று
காலையில் எழுந்து பிரண்ட் கல்யாணத்துக்கு போறேன்
என்று சொல்லுறாளே என்று...