Episode....20
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
தன்னை பாவமாய் பார்த்த சுவேதாவை பார்த்து மெல்ல சிரித்தாள் ஆயிஷா....
என்னடி...
யோசிக்கிறாய் வா ஒரு காப்பி தானே குடிச்சிட்டு போவோம்...
என்று நக்கலாய் கூறிவிட்டு
ஓரக்கண்ணால் சுவேதாவை பார்க்கவும்........மச்சி...
நீ ஏன் இப்ப சிரிக்கிறாய் என்று
எனக்கு தெரியும்...
எனக்கு காப்பியும் வேண்டாம்
ஒன்றும் வேண்டாம் வா கிளம்புவோம்
என்று
சிறு கோபத்தோடு கூறினாள் சுவேதா...இருந்தும் ..
ரீ கடைக்கு முன்னால்
நின்ற வினோத்தோடு பேச அவள் மனசு ஏங்கியது....உனக்கு தெரியும்...
தானே...
ஏன் காப்பி குடிக்க கூப்பிட்டேன் என்று...
கன்ரீனுக்கு...
முன்னால்
நிற்க்கிற உன் ஆளையும் பார்த்திட்டேன்
நீதானே...
ஏதோ அவனோடு ஏதோ பேச ஆசைப்பட்டாய்....
சும்மா...
சீன் போடாமல்...
போய்...
பேசிட்டு வா...
நான் வெயிட் பண்ணுறேன்...
ஆயிஷா...
ஆதரவாய் கூறவும்....என்னடி...
பேசுறது பயமா வேற இருக்கு...
அதோடு...
என்னை அவரு நினைவு வைச்சிருக்கிறாரோ தெரியல....
போ ..
என்னால முடியாது....
சுவேதா ரொம்ப கூச்சப்பட்டாள்....
தோழியின்...
கைகளை இறுக பற்றி.....என்னடி...
நீ....
அவனை எப்போ பார்த்து பேசுவேன்
என்று
ஏங்கிட்டு இருந்தாய்...
இப்ப...
என்னடா
என்றால் இப்படி கூச்சப்படுறாய் ...
வா நானும் கூட வாரேன்...
ஆயிஷா...
கூறிய அதே நொடியில்....வினோத்தோடு...
பேசிட்டு நின்ற அன்வர்...
வீதியின்...
மறுபக்கத்தில் நின்று ஆயிஷாவும் சுவேதாவும்...
தாங்கள்
நின்ற திசையை பார்த்து பேசுவதை கண்டுவிட்டு....
வினோத்தின் தோள்களை தட்டி.....
மச்சான்...
அங்க பார்டா....
யாரோ இரண்டு பொண்ணுங்க நம்மல பார்த்து...
ஏதோ பேசிட்டு இருக்காங்க....
அவங்கள உனக்கு...
தெரியுமா....
என்றான்....
