Episode......56
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
சின்னதாய்....
சிரித்த வினோத்
சும்மா காமடி பண்ணாதேங்க என்றான்..இதில்...
காமடி பண்ண என்ன இருக்கு...
என்ற ஆயிஷா
உண்மையை தானே சொன்னேன்...
உங்களை மாதிரி
ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு கணவனாய் கிடைத்தால்...
அவள்
உண்மையில்
கொடுத்து வைத்தவள்தான்...
அதில்
எந்த சந்தேகமும் இல்லை என்றாள்
மறுபடியும்....அப்போது...
நிரோ தமக்கையை பார்த்து
பெருமையாய் சிரித்தாள்....ஆனால்...
வினோத் வெறுமையாய் சிரித்தான்....இந்த
சிரிப்புக்கு என்ன அர்த்தம்..
என்றாள்
ஆயிஷா வியப்பாய்....இல்லை...
நீங்க சொல்லுவதை நினைக்கும் போது சந்தோஷமாய்தான்
இருக்கு
பட்...
என் நிலையையும் கொஞ்சம்
யோசிக்கனுமல்ல
நானே...
யாருமில்லாத ஒரு பாதையில்
போய்ட்டு இருக்கிறேன்...
இதில் ..
கல்யாணம் என்ற ஒன்றை நான் யோசிக்கவே இல்லை...
அதோடு...
என்னை நம்பியும்
ஒரு பொண்ணு வரனுமே...ஏனப்பா...
இப்படி பேசுறாய்....
உனக்கு என்ன குறைச்சல் என்று இடைமறித்த மாதவி....
உன்...
மனசுக்கு நீ நல்லாயிருப்பாய்...
ஆயிஷா
சொன்னது போல்...
உனக்கு வரபோற மனைவி ரொம்ப கொடுத்து
வைச்சவள்தான்....
காசு பணம் அந்தஸ்து....
இன்றைக்கு வரும் நாளைக்கு போய்டும்...
ஆனால்...
அன்பு பாசம்
உறவுகள்...
எல்லாம் நம்மோடு கூட வருபவை தான்...
அந்த அன்பும்
பொறுமையும் விட்டுக்கொடுப்பும்
அரவணைப்பும்...
உன்கிட்ட நிறையவே இருக்கே...
இதைவிட வேற என்ன வேணும்...
என்றார்.....அதை கேட்டு...
வினோத் சந்தோஷபட்டானோ இல்லையோ
தெரியல
ஆனால்....
சுவேதாவின்
சந்தோஷத்துக்கு அளவே இல்லாமல்
இருந்தது...
அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துகிட்டே
இருந்தாள்.....
