🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
Episode.........15
இமைகளை இறுக மூடினாள்....
புரண்டு புரண்டு படுத்தாள்....
தூக்கம் வரவே இல்லை சுவேதாவுக்கு...
அந்த புல்லாங்குழல்...
இசை அவளை ஏதோ செய்தது....என்னொரு இனிமை
கேட்டுக்கொண்டே இருக்கனும் போல தோன்றியது....பல மணிநேர போராட்டத்தின்
பின்..
அவளை தூக்கம் அணைத்துகொண்டது...அடுத்தநாள்...
காலை எழுந்தும் காலேஜ் கிளம்பும்போது
சுவேதா...
ஆயிஷாவின் தோளை தட்டி
மச்சி...
அந்த புல்லாங்குழல் வாசிக்கும் முகத்தை
ஒரு தடவை பார்க்கனும்
போல இருக்கடி என்றவும்...என்னடி...
நைட் முழுதும் இதைபற்றிதான் பேசிட்டு இருந்தாய்...
காலையில்
எழுந்தும் அதையே பேசிட்டு இருக்கிறாய்..
அப்போ...
படிக்கிற ஜடியாவே இல்லையா உனக்கு....
இங்க படிக்கதான்
நாங்க வந்திருக்கிறோம்
அதை மறந்திடாத....
ஆயிஷா...
சிறு கோபமாய் சொன்னாள்....அதன்பின்...
சுவேதா எதுவும் பேசவில்லை
ஆயிஷாவோடு கிளம்பி காலேஜ் போனாள்.....சில நாட்கள் சென்றது...
சுவேதா..
படிப்பிலும் கவனம் சிதறவில்லை...
ஆனால்...
இரவானதும் அவளுக்கு அந்த புல்லாங்குழலின் நினைவு வந்து போனது...காலேஜில்...
ஆகாஷின் அலப்பறைகள்...
எல்லை மீறி போனது...
எப்ப பார்த்தாலும் சுவேதாவை சுற்றி சுற்றியே வந்தான்....
அது ஆயிஷாவுக்கு பிடிக்கவில்லை....
எதிர்த்து பேசவும் முடியவில்லை
சுவேதாவிடம்..
அவனிடமிருந்து கொஞ்சம் விலகி நடக்குமாறு கூறி தானும்
அப்படியே நடந்தாள்.....இப்படிதான்....
ஒருநாள் காலேஜ் முடிந்து வெளியே
வந்த ஆயிஷா...
சுவேதாவையும் இன்னும் சில தோழிகளையும் கூட்டிக்கொண்டு காலேஜ் முன்னால்
உள்ள கன்ரீனுக்கு போனாள்.....அது...
வினோத் வேலை பார்க்கும் கடைதான்...அவர்கள்...
கன்ரீன் உள்ளே போன டைம்
வினோத் அங்கிருந்த மேசையை துடைத்துக்கொண்டிருந்தான்.....
![](https://img.wattpad.com/cover/220873119-288-k938448.jpg)