நித்தம் உன் சத்தம்
ஆழ் கடல் ஆழி போல்
ஆர்ப்பறிக்கிறது என் மனதில்..சந்தித்த வேளையில்
சத்தமே இல்லாமல்
என் மனதை எடுத்து
சென்றாய்...இன்று தன்னிலை
மறந்து தவிக்கிறேன்
உன் நினைவால்...உலகம் மறந்து உன்னுள்
கலந்து துடித்த இதயம்
இன்று உன் நினைவால்
மட்டும் உயிர் வாழ்கிறது...வாழ்க்கை எனும் கூண்டுக்குள்
அகப்பட்டு கிடந்த நாம் இன்று
நான் ஆகி போனது ஏன்...நமக்குள் உறவு இருந்தும்
இன்று உரிமை இல்லாமல் போனதே...காதல் என்று நான் நினைத்ததை
நீ கட்டாயம் என்று உதறி சென்றுவிட்டாயே...கடவுளின் மூடிச்சு இன்று
கட்டவிழ்ந்தது ஏன்????
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....