நீ வரும் போது ஆனந்த
களிப்படைகிறேன் உன்னை
காணும் வேலையில்
உள்ளுக்குள் சொல்ல
முடியாத ஒரு உணர்வு
நீ என்னை தீண்டும் போது
மெய் மறந்து உன்னக்குள்
புதைகிறேன் மீண்டு வர
விரும்பாமல் ஆனால் நீயோ
என்னை ஏமாற்றி கொண்டே
இருக்கிறாய் சொல்லிக்கொள்ளாமல்
வந்து இன்பம் தருகிறாய்
அதை உடனே நீயே
பறித்துக்கொண்டு
தவிக்கவிடுகிறாயே நீ உடனே
பிரிந்தாலும் உன் வாசம்
என்னை உன் வசம் இழுத்து
செல்கிறதே உன் வருகையில்
எத்துணை ஜீவன் உயிர்
பெறுகிறது உனக்கு மட்டும்
எத்துணை வலிமை
ஆனால் சுயநலம் கொண்ட நான்
மட்டும் நீ அழும் போது ரசித்து
சிரிக்கிறேன் என்னை மறந்து ..
பருவம் தவறாமல் தரிசனம்
தரும் உன்னை இன்று மனிதன்
என்னும் மனம் இல்லாதவர்களால் இயற்கை காடு மலைகளை அழித்து உன்னை காண்பதற்கு தவம்
செய்யும் படி ஆயிற்றே ...
மீண்டும் ஒருமுறை வரம் தருவாயா
உனக்காக ஏங்கி தவிக்கிறேன்
நீ சிந்தும் மழைத்துளியில்
ஒருமுறை உனக்குள்
உறவாடி கொள்கிறேன்
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....