வாழ்க்கை புத்தகத்தின்
அழகான வரிகளாய் நீகல்லான என் மனதை
கனியாக மாற்றியே கள்வன் நீவெறுத்த உலகை விரும்பி
பார்க்க வைத்த என் விடியல் நீவிலகி நடந்த என்னை விரும்பி
ஏற்ற உன்னதமான உறவு நீவாழ்வு இருண்ட போது வாழ்க்கையை
வண்ணமாக மாற்றிய வசந்தம் நீபாறையாய் இருந்த என்னை
சிற்பமாக மாற்றிய சிற்பி நீஎட்டா கனியா இருந்த என் புன்னகையை
எட்டி பிடித்து காட்டிய மாயவன் நீஎன் உதட்டில் பூக்கும்
புன்னகையின் வாசம் நீபுழுவாய் இருந்த என்னை வண்ணத்து பூச்சியாய் மாற்றிய பகலவன் நீ
புயல் அடித்த என் வாழ்க்கையை
சில்லென்று
மாற்றிய மிதமான காற்று நீ
என் இதயக்கூட்டில் தினமும்
பூக்கும் என் காதல் ரோஜா நீஎன் வாழ்க்கையாய் நினைத்த என்னை
நம் வாழ்க்கை என மாற்றி
இன்று என்
உயிரினில் கலந்தவன் நீ
என் உயிரே....
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....