அலைபாயுதே நெஞ்சம்

112 17 167
                                    

வாழ்வில் நாம் இணையப்போகும் அந்நாள் வரை உனக்காக காத்திருக்கும் நேரம் வீண் ஆகிடாமல் இருக்கவே கவிதை எழுதி கரைகிறேன் ...

காதுக்குள் ரகசியம் கூற வேண்டும் என்று சொல்லி அழைத்து என் கன்னத்தில் உன் இதழ்கள் தடுமாறி இடமாறியது என நீ கூறும் பொய்  கேட்க ஆசை....

உனக்கு பிடிக்காத விஷயம் நான் செய்வேன் என கூற உன் முகம் சுளித்து வேண்டாமே என நீ கெஞ்சும் அழகை ரசித்திட ஆசை....

உன் முகம் கண்டு நாணம் கொண்டு சிரிக்கையில் நீ ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என கேட்கையில் என் வெட்கம் மறைத்து நகர்ந்திட ஆசை......

சண்டையிட்டு பேசாமல் இருக்க நீ வந்து  என்னை சமாதானம் படுத்தும் அழகை ரசித்திடவே உன்னிடம் நொடிக்கு ஒருமுறை சண்டையிட ஆசை...

உன் தோள்சாய்கையில் என் தலைகோதி தாயாக மாறி என் நெற்றியில் முத்தமிட்டு உன் மடியினில் குழந்தையாய் தவழ்ந்திட எனக்குள் கோடி ஆசை இருக்கிறதே....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now