இருமனம்

80 18 148
                                    

அவள் உணர்வை மதித்து....
அவன் மனம் அறிந்து....

அவள் ஆசை தெரிந்து...
அவன் காதல் புரிந்து...

அவள் உலகம் நீ என்பதை என்றும் மறவாமல்...

அவன் இனி வாழப்போவது உனக்காக என்ற நம்பிக்கை வைத்து...

இல்லறத்தின் புரிதல் உடலால் மட்டும் அல்ல உள்ளதாலும் என்றுணர்ந்து.....

வானோடு நிலவாக என்றும் இணைந்து வளர்பிறையாய் ஒளிர்ந்து......

என்றும் இன்பம் கூட்டி இன்றுள்ள காதல் என்றும் அணுவளவும் குறையாமல்.....

கவியோடு இசைபோல்
நட்பும் காதலும் கலந்தும் காலம்தோறும் மனம் ஒத்து.....

இரு கரம் கோர்த்து மகிழ்வுடன் ஒரு வாழ்க்கை மனநிறைவோடு வாழ்ந்து...

அவனுக்கு இதய துடிப்பாய் நீயும்
அவளுக்கு விழியின் காட்சியாய் நீயும்...பிடித்த கரத்தை இறுக்கமாய் கோர்த்து....

உன்னவனின் ஆசை அவன் சொல்லும் முன்பே நீ  நிறைவேற்றி..

உன்னவளை என்றும் உன் முதல் குழந்தை போல் அவள் தவறை தனிமையில் சுட்டிக்காட்டி....

அவன் கோபத்தை உன் அன்பால் மறக்கடித்து...

ஈருயிரும் ஆருயிராய் திகட்டாத அன்பை தித்திப்புடன் பருகி
வாழ்வின் சரிபாதியாக மாறி இல்லறத்தின் இலக்கணமாய்
இருமணமும் ஒருமனமாய் என்றும் இன்று இருக்கும் அதே அதீத அன்புடன் வாழ்ந்திட வாழ்த்துக்கள்......

உன்னவன் என்று உறுதி செய்து இன்றுடன்  ஒரு திங்கள் ஆயிற்று.. இன்று இருக்கும் இந்த அன்பு ஆண்டுகள் பல கடந்தாலும் புதிதாய் அழகாய் பூத்திட வாழ்த்துக்கள்.... narznarJailani_Boss

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now