கடற்கரை

80 22 156
                                    

தென்றல் காற்று தீண்டலோடு கடற்கரை ஓரம் ஈர மணலில் சிறு அலை தொட்டு செல்கையில் உன் சட்டை பிடித்திழுத்து பாதச்சுவட்டை பின் தொடர ஆசையடா ..

மெல்லிசை கேட்டு மென்மையாய்  உன்
கரம் கோர்த்து நடக்கையில் என் மெட்டி ஓசை கேட்டு நீ ரசித்து வர ஆசையடா...

கடலோரம் மெல்ல உன்னோடு நடக்கையில் ஈரம் பட்டு குளிரெடுக்கயில் உன் கையணைப்பில் தோள் சாய்ந்து நடந்திட ஆசையடா...

வீடு செல்லும் நேரம் வந்ததும் எனைப்பிடித்து விரைவில் செல்ல வேண்டும் என இழுத்து பிடிக்கையில்.....

கடல் மணலில் கால்புதைந்து காலனி அதன் வேகத்தை குறைக்கையில் உன் கைபிடித்து ரசித்து நடத்திட ஆசையடா ...

உனக்காய் எழுதிய பின்பு வாசித்து பார்க்கையில்  உறுதியாய் ஒற்றை புன்னகை என் உதட்டோரம் அழகாய் அமர்ந்து உன்னை பற்றியே சிந்திக்க வைக்குதடா..

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now