கண் விழித்ததும் அவனை தேடி காணாமல் தவிக்கிறேன்...
சட்டென வரும் இடி மின்னல் போல் எனக்குள் ஒளி வீசி மறைந்து கொண்டான்...
என் மனதை அவன் வசம் இழுத்து கொண்டு பெயரை கூட சொல்லாமல் சென்றுவிட்டான்...
செவ்வானம் சிவப்பை என் கன்னத்தில் ஏந்திக்கொள்ள விட்டு எங்கோயிருந்து
ரசிக்கிறான்...
ரகசிய தேடலாய் எனக்குள் மாறிப்போனாய்...
நிமிட நேர கண்டதில் நீயே வேண்டும் என்கிறேன்...
விழியோரத்தில் மௌனமாய் சொல்லி சென்ற கதையென ..
நிழல் என்று நான் அறிந்தும் நிஜமாய் தொடர வைத்துவிட்டாய்...
வந்ததும் கானல் நீராய் மறைந்துவிட்டு யாவும் நீயே என்பது போல் தவிக்கவிடுகிறாயே...
கனவில் தோன்றி கண்ணுக்குளே சிரித்து கொண்டு நிற்க்கிறாயே...
காலத்தின் கேள்விக்கு நீ ஒருவனே என் வாழ்வின் பதிலாய் தெரிகிறாய் ..
KAMU SEDANG MEMBACA
ஆசைகள் ஆயிரம்
Puisiமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....