நீ பார்த்த ஒற்றை
பார்வையில்
என் மனம் பூத்து
குலுங்கி..நீ பேசி சென்ற
வார்த்தை எல்லாம்
என் அழகான
நியாபகமாய்
என் சுவாசமே
நீயாய் மாறி...நான் வாழ்வதே
உனக்காய்
என்ற காதலில்
ஆசையுடன் உன்
கைகோர்த்து..தேவர்கள் அழைத்து
நேரம் பார்த்து
அழகாக நாம்
இணையப்போகும்
நன்னாள்
தேதி வைத்து..அழகாய் அச்சிட்டு
உன் பெயர் அருகில்
என் பெயர் நம்
திருமண
பத்திரிகையில்
அழகாய் பொறித்து..வரவேற்பில்
வாழைமரம் நட்டு
வானவில் போன்று
வண்ணமயமாய்
தோரணம் கட்டி..பெரியோர்கள்
ஆசியுடன்
என் கழுத்தில்
நீ பொன்தாலி
பூட்டி...திருமணம் குடும்ப
விருப்பபடியும்
தேன்நிலவு நம்
ஆசைப்படியும்....நிலவுக்கு
போட்டியாய்
நாம் உறங்கா
நிமிடம்...உன் கைவளைவில்
இருந்து பொன்னிலவு
ரசித்து....விடியலில்
உன் மார்பில்
துயில் கொண்டு...கால் கொலுசு
சத்தத்தில்
உன் பெயர்
கலந்து சலசலக்க...கை வளையல்
ஓசை உனக்காய்
சிணுங்கி...உயிர் அணுவில்
உனை சுமப்பது
போன்று...கனவில் நிகழும்
காட்சி
அனைத்தும்
என்று
நிறைவேறும்
என்ற ஆசையுடன்..இன்று அழகான
கவிதைகளில்....
உனக்கே உனக்காக
என் மன்னவனே
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....