கோபத்தில் அழாமல் பேசிட ஆசை...
பிடிக்காத ஒன்றை என்னால் செய்ய முடியாது என மறுத்திட ஆசை...
சிரிப்பு உதட்டால் மட்டும் இன்றி உண்மையாய் இருந்திட ஆசை..
மனம் விட்டு தனிமையில் அழுது
துயரம் மறக்க ஆசை....
பிடித்த ஒன்றை யாருக்காகவும் விட்டு கொடுக்காமல் தக்க வைத்து கொள்ள ஆசை...
உறக்கத்தில் எந்த சிந்தனை இன்றி நிம்மதியாய் உறங்கிட ஆசை..
காலை விடியலின் தினமும் புதிய வாழ்க்கை பிறந்தது போல் அமைந்திட ஆசை..
கடந்த காலம் காற்றோடு கரைந்து போக ஆசை...
தோழிகளிடம் சரிக்கு சமமாய் சண்டையிட்டு முட்டிக்கொள்ள ஆசை..
சண்டைக்கு பின் அவர்களே சமாதானம் செய்யதிட ஆசை...
கஷ்டம் இருந்தால் அதை அன்றே மறந்திட ஆசை...
எனை காய படுத்துவோரையும் நான் காய படுத்தாமல் இருந்திட ஆசை..
மொத்தத்தில் நான் என்றும் நானாகவே வாழ்ந்திட ஆசை...
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....