அழகான கவிதை ஒன்று இயற்றிட ஆசை ஆனால் உன் அழகுக்கு முன்னால் அது வெறும் வார்த்தையாய் போய்விடுகிறது...
இரவில் மட்டுமே வருகிறாய் வந்த பொழுதில் ஆயிரம் அழகான கதைகள் பேசுகிறாய் மனதோடு..
விடிய விடிய என்னோடு உரையாடுகிறாய் விடியலோடு என்னை மறந்து செல்கிறாய்......
எனை போல் பலரும் உனை இது போல் வர்ணித்து ரசிக்கிறார்களே சற்று கோபமாக தான் உள்ளது உன்னை ரசிப்பவர் மீது ....
நிதமும் முழுதாய் வருவதில்லை ஆனாலும் உன் அரைகுறை அழகில் மயங்காத ஆட்கள் இல்லை..
காதலில் விழுந்தோர் அனைவரும் மனம் கவர்ந்தவளை உன்னோடு ஒப்பிடுகிறார்கள்..
அவர்கள் அறியவில்லை உன் அழகுக்கு ஈடுஇணை எவரும் இல்லை என்பதை...
கவிஞர்கள் மொத்தமும் உன்னோடு வர்ணிக்கிறார்கள் பெண்களின் அழகின் அழகை மிக அம்சமாக அமைகிறது உன் அழகின் அழகு...
எனக்குள் ஒரு பேராசை உள்ளதே உன் அழகை தோற்கடித்து ஒரு கவிதை இயற்றி அதை கண்டு மகிழ்ந்திட..
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....