என் உறவான உயிரானவனே!! வெப்பமாய் சுட்டெரிக்கும் என் பார்வையை உன் மிருதுவான விழி வீச்சால் வெண்பனியாய் உருக வைத்தாய்....
மனதை சுற்றி எழுப்பிருந்த மதிலை உன் மாசற்ற பேச்சால் தகர்த்தெறிந்து உள் நுழைந்து எனை ஆட்கொண்டாய்....
உலகை வெறுத்து ஒதுக்கிய போது உன் அன்பால் இவ்வுலகை அதிகமாய் நேசிக்க வைத்தாய் என் விரல் கோர்த்து...
பிரளயமே வந்தாலும் கலங்காமல் கல்லாய் இருந்த மனதை உன் மார்பில் சாய்த்து என் துன்பத்தை துடைத்தெறிக்க வழி செய்தாய்... ..
கொக்கு போல் ஒற்றை காலில் நின்றே என் உயிரை கொக்கிபோட்டு இழுத்து
ஏதேதோ சூழ்ச்சி செய்து எனை உனக்காக ஏங்க வைத்து இன்று என் தவிப்பை ரசிக்கிறாய் அருகில் வராமல் ..... உன் வரவுக்காகவே காத்திருக்கிறேன் என் கனவு காதலா.........
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....