உயிரில் கலந்து உணர்வில் நிறைந்து என் எண்ணம் முழுக்க நீயாய் .........உயிர் அணுக்கள் அனைத்தும்
உன் நினைவால் உயிர் வாழ்கிறது இன்று ....ஆயிரம் முறை நீ உச்சரித்த என்
பெயரை இன்று ஏனோ யாரோஉச்சரிக்கும் போது உணர்வற்று
உயிர் பிரிகிறது..புரியாமல் பிரிந்த நம் உறவு
இன்றும் மறையாமல் வாழ்கிறது
என் நினைவில்ஒரு நொடி உனை பிரிந்தாலும்
ஆயிரம் முறை உன் அலைபேசிக்குஅழைக்கும் நான் இன்று ஒரு முறை நீ அழைப்பாயா என காத்திருக்கிறேன்
உன்னோடு வாழ்ந்த நொடிகள்
அனைத்தும் மறையாமல்
இருக்க...........இன்று உறங்காமல்
இருக்கிறேன் மடத்தனமாய் ......
எனக்குள் இருப்பது உன் நினைவு
மட்டும் தான் என்பதை மறந்து...என் பின்னோடு ஆயிரம்
உறவு இருந்தும் உன் உறவு
மட்டுமே வேண்டும் என்கிறேன்
நீ வேண்டாம் என்ற போதிலும்..சிதறிய வார்த்தைகளை கவிதைகளை சேர்க்க தெரிந்த எனக்கு பிரிந்து சென்ற நம் உறவை சேர்க்க முடியாமல் போனது என் விதியோ ..
என் மனதில் மட்டும் நீ
நிறைந்திருந்தால் என்றாவது
உன்னை மறந்திருக்கலாம்....... ....
என் உயிரில் அல்லவா நீ நிறைந்து
இருக்கிறாய் ...உயிர் விட துணிந்தும் எனக்குள்
வாழும் உனக்கும் வலிக்கும்
என்றே என் மனவலியயை
தாங்கிகொள்கிறேன் துணிந்து ....
மரண வலி என தெரிந்தும்...உன்னை பிரிந்து வாழத்தெரிந்த என்னால் உனை மறந்து வாழ
வழி தெரியாமல் போனதேனோ...செத்துவிடும் நிலைமையில்
நானிருந்தும் உன்னை
மறந்து விடும் நிலையில்
நானில்லையே ....
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....