🤐

53 21 39
                                    

காற்றுக்கு வேலியிட ஆசை அந்த வேலிக்குள் காற்றுக்கு கண்கட்டி
கண்ணாமூச்சி விளையாட ஆசை...

கொட்டும் மழையை குத்தகைக்கு எடுத்து என் ஆசை தீர என் மனம் விரும்பும் போதெல்லாம் கொட்ட சொல்லி ரசித்திட ஆசை...

ஆழியின் ஆழத்தை அரைநொடியில்  அதன் ஆழத்துக்கு சென்று அளந்து விட ஆசை..

மலை மேல் ஏறி மண்டியிட்டு மனதில் சோகமின்றி தவமிருக்க ஆசை..

அடுத்து வரும் பிறந்த தினத்தில் வயது கூடாமல் குறைந்திட ஆசை..

ஆசை துறந்து வாழ்வது வாழ்க்கை இல்லை எல்லையற்ற ஆசையோடு வாழ்வதே வாழ்க்கையென
புத்தனுக்கு புரிய வைத்திட பேராசை....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now