மழலை

83 19 50
                                    

தாயின்
பெருமை 
உணர்ந்தது 
உன்னாலே ...

உன்
மழலை 
சிரிப்பில் 
என்னை
மறந்து
ரசிக்குறேன் ...

உன்
தேவை
என்னவென்று
சொல்ல
தெரியாமல் 
அழுகையில் 
கவலை
தோன்றினாலும்  ...

அந்த
விம்மலின்
அழகை 
காண
இரு கண் 
போதாது
என்
செல்வமே....

உன்
மழலை
பேச்சுக்கு
அர்த்தம்
அறியாமல்
நீ
பேசும்
அழகையே
பார்க்கிறேன்...

உன்
பொக்கை
வாய்
திறந்து
நீ
போடும்
சத்தமெல்லாம்
அழகான
சங்கீதமாய்
கேட்கிறேன்....

காற்றோடு
அசைவது
போல்
நான்கு
கால்கள்
கொண்டு
நீ
நடந்து
வருகையில்
கவலை
அனைத்தும்
மறக்கிறேன்...

உன்
இரு கை
குவித்து
என்
ஒற்றை
விரலை
அடக்குகையில்
உணர்கிறேன் 
உலகை
வென்றுவிட்டதை ....

Epotho kodutha title salmasasikumar
ipo ithula konjam alter pani potu iruken😉😉😉😉

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now