நான்
முதன்
முதலாய்
உதிர்த்த
கவிதை
அழுகை
இன்று
வண்ணமயமாய்
தீட்டி
கொண்டிருக்கும்
கவிதை
என் சிரிப்பு
அதிலும்
என்
உயிருக்குள்
உயிரான
ஜீவன்கள்
என்னால்
உயிர் கொண்டு
சிரிக்கையில்
உலகை
வென்ற
மகிழ்ச்சி...
ஆனால்
நம்மில்
சிலரோ
இன்றும்
குறிஞ்சியாய்
என்றோ
ஒருநாள்
புன்னகை
பூத்து
ஜீவன்
இன்றி
மலர்ந்து
வாடுகிறார்கள்
குறிஞ்சியின்றி
மல்லியாய்
தினமும்
பூத்து
குலுங்குங்கள்
சிரிப்பு
ஒரு
மத்தாப்பு
அதை
நாம்
ஏற்றயில்
தான்
அழகாய்
மிளிர்க்கும்...
நாம்
புன்னகை
உதிர்க்க
ஊற்றும்
தண்ணீர்
பிறரின்
கண்ணீர்
ஆகாதவரை
அழகாய்
பூத்திடலாம்
தினமும்
அகத்தால்
மலர்ந்திடலாம்..
நம்மை
சுற்றியும்
அழகான
ஓளி
ஏற்றிடலாம்
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....