உனக்காய்

126 15 42
                                    


உன் விழிகளுக்குள் சிக்கி கிடக்க நினைக்கிறேன்  உறுத்தும் என விடுவித்து விடாதே என் உயிரின் ஒளி மங்கிவிடும்....

நான் அறியாமலே எனை முழுதும் சிறை பிடித்த குற்றத்திற்காக காலம் முழுதும் எனக்குள் அகப்பட்டு வாழ தண்டனை கிடைக்க போகிறதே.. .

உனக்காய் வடிக்கும் ஒவ்வொரு கவிதையிலும் என் காதலின் ஆசை மொத்தமாய் அடங்கி உள்ளது...

என் மனமோ உன் விழி கொண்டு நோக்கும் அந்நாளுக்காக ஏங்கி தவிக்கிறது..

ஒருமுறை உன் விழி கொண்டு நோக்கினால் போதுமே நொடி கூட தாமதிக்காமல் என் காதலை உணர்த்திட...

உனக்காய் ஆயிரம் கவி படைத்திடுவேன் என் மனம் முழுதும் காதலோடு இயற்ற போகும் ஒற்றை வார்த்தை கவி உன் பெயர் தானே..

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now