😍😘அம்மா😘😍

104 15 31
                                    

அறிந்து கொண்டேன்
அவளின் வார்த்தைகள் கூட என்னை காயப்படுத்துமென..

புரிந்து கொண்டேன் அவளின் சொல் வெப்பமாய் தகிக்குமென..

தெரிந்து கொண்டேன் அவளும் என்னை கலங்கடிப்பாள் என்று..

உணர்ந்து கொண்டேன் என் உணர்வுகளை சில நேரம் உணரமாட்டாள் என்று....

இறுதியாய் உறுதி கொண்டேன் இனி அவளிடம் பேசவே கூடாதென..

கோபம் எனக்குள் நெருப்பாய் சுடர்விட்டெரிய பேசாமல் மௌனம் காத்தேன்...

அவள் பேசிய அத்தனை வார்த்தைகளும் மறந்து சாப்டியா டா என்ற வார்த்தையில் அவள் பேசிய வார்த்தை அனைத்தும் ஒன்றுமில்லாமல் போயிற்றே...

என் கண்ணீரை கூட கண்டும் காணாமல் போபவள் வயிறு காய்ந்தால் துடித்து தான் போகிறாள்...

              ######அம்மா ######

அவள் பேசுவது தான் ஏனோ என நொந்து போனேன்...

பலமுறை கடிந்துவிட்டு சில நேரம் கொஞ்சுகிறாள் என...

தவறு என் மீது தானோ நான் தானே மறந்து போனேன் அவளுக்குள்ளும் மனம் உண்டு என்பதை..

அவளின் கோபம் அர்த்தமானதென்று.. அவளின் கடுமை அவளது இயலாமை என்று..

அவளின் சுடுசொல் அவளது வலி என்று....

நிமிட நேர நிதானத்தில் தானே புரிந்தது எனது புன்னகை முகத்தில் தானே அவள் உலகம் உள்ளதென....

நொடி நேரம் சுணங்கிய முகத்தை கண்டு துடிதுடித்து போகிறாள்....

அவளின் அன்புக்கு ஈடாய் எதை கொடுத்து ஈடு செய்ய... அது இயலாத ஒன்றாய் போயிற்றே....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now