என் கணவா உனக்காக

80 14 45
                                    

என் அழகில் மயங்காது என் அன்பில் அடங்கி வாழப்போகும் என்னவனே
என் கஷ்டங்களை மறக்க
உன் காதல் கொடு...

காலம் கடந்தும் கல்வட்டாய் பதிந்த என் கசப்பான கடந்த காலத்தை மறக்க துணையாக இருக்க போகும் மாயவனே
நான் தோள் சாயா
உன் தோள் கொடு...

கொட்டும் மழை போல் என் துன்பம் அனைத்தும் கண்ணீரில் கரையும் நேரம்
உன் மார்பு மீது முகம் புதைக்க
இடம் கொடு...

இனி வாழ்வில் என்னை சுற்றி எது நடந்தாலும்   நான் சிரிப்போடு கடந்திட
என்றும் எனக்கு காவலனாய்
இருந்திடு...

கோபம் கொண்டு மௌனம் என்னும் ஆயுதம் எடுத்து போர் தொடுக்காமல்
நெற்றி இதழ் ஒற்றி
அடித்திடு..

உடல் சுகமின்மையில் என்னை கையில் தாங்கி சுமக்க வேண்டும் என  நினைக்கவில்லை ஆனால்
என் முகம் பார்த்து அணைத்து  தலைகோதிடு....

நம் குழந்தைகளை பக்குவமாக வளர்க்கும் அளவு நான் பெரிய பெண் ஆனாலும்
என்றும் உன்னிடம் குழந்தையாய் மாறி என் ஆசை சொல்லிக்கொண்டே போக சுதந்திரம் கொடு...

என் கவிதை அனைத்தும் கற்பனையில் முடிந்துவிடாமல் என் வாழ்வின் அர்த்தமாய் என் உயிரின் ஆத்மார்தமாய் நீயே விளங்கிடு என் சரிபாதியாக மாற போகும் என் கணவனே....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now