கற்பனையில் ஒரு காதல்

259 24 80
                                    

கற்பனையில் ஒரு காதல்

சிறகின்றி பறக்கிறது இதயம் உன்னை கண்டதும்..

இதழில் இருக்கும் வார்த்தை உன்னிடம் வர மறுக்கிறது..

இதய சுமை கூடுகிறது... உன் முகம் கண்டு தடுமாறுகிறது....

பக்கம் பக்கமாய்  எழுதுகிறேன் அதை
உன்னிடம் பகிர நினைக்கையில்
வார்த்தை அனைத்தும் வம்பு
செய்கிறது.....

நீ நெருங்கி வந்தாலே உறைந்து
விடுகிறேன்....

விலகி நடந்தால் மெழுகென உருகி
போகிறேன்....

உன்னை சிறைபிடிக்க அருகில்
வந்தால்...

நானே அதில் கைதி ஆகிறேன்
உன்னிடத்தில்...

சுற்றி எத்தனை நபர் இருந்தாலும்
வாடிய மலராய் இருக்கும்
நான்...

தொலைவில் உன்னை காண்கையிலே
ஏனோ பூவாய் மலர்கிறேன்...

அதிகம் ஏங்க விடாமல் அருகில்
வந்து உன்  காதல் பார்வையில்
என்னை களவாடி..

உனக்குள் என்னை ஆழமாய் புதைத்து...
உன் அன்பில் அழகாய் மலர செய்யடா
என் காதலை.....

தூரிகை இல்லாமல் வண்ணம் தீட்டடா என் வாழ்வில் உன் காதல் கொண்டு...

உன் காதல் என்னை வந்து சேராமல்
வாழ்க்கை இருளாய்
இருக்கிறது....

உன் காதல் தீபம் கொண்டு வாழ்வை  ஒளிரச்செய்யடா.....

உன்னை காணும் முன்பு கள்வன் எங்கே என தேடினேன்...

உன்னை கண்ட பின்பு காணும் அனைத்திலும் உன்னையே காண்கிறேன்....

அலை அலையாய் எழும்புகிறாய் என் எண்ணங்களின் ஊற்றாய்...

நாட்குறிப்பு மொத்தமும் உன் நினைவுகளில்
என் காதலால் ஏடுகள் அனைத்தும்
நிறைகிறது..

உன் மீது காதல் கொண்டதற்கு காரணம்
நான் அறியேன்..

ஆனால் உன்னை கண்ட பின் தான் காதலின் அர்த்தம் அறிந்தேன்....

என் இதழ் மூடி ஒருமுறை உணர்த்தி விடு நான்  உனக்காக தான் என்று.....

சுவாசம் இன்றி உன் நேசம் கொண்டு மடிந்து விடுகிறேன் உன் மடியினிலே....

எண்ணங்கள் அனைத்தும் எழுதிவிட்டேன் வார்த்தை மாற்றி கவிதையாக... அதை உன்னிடம் சேர்க்க வழி தான் அறியவில்லை....

Hey my swt anabella 😘😘😘hajiriyas Ini thirumba athu mathiri varthai un vaiyla vanthachu.... Ena panuvenu enakey theriyathu.....😏😏😏😏😏

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now