ஆள்பவன்

137 16 167
                                    

கனவில் கண்ட உன்னை கண்ணெதிரே காணவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளேன் காலம் தோறும் உன்னோடு உறவாட....

என் மனமெனும் பாலைவனத்தில் முதலில் பூத்த காதல் செடி நீயடா உன் காதல் மலர் கொண்டு என்னை பூக்க செய்து நம்முள் பூமனம் வீச செய்யடா ...

ஊர் பார்க்க தாலிக்கட்டி உன்னவளாய் வலம் வந்த பின்பு உயிரும் உடலும் உனக்கே சொந்தமாகி உன் அன்பில் கரைவேனடா...

அனைவரிடமும் சுடும் வெயிலாய் கடுமையாக இருக்கையில் என்னிடம் மட்டும் பனியாய் உருகுகையில் மொத்தமாய் கரைந்தே போகிறேனடா....

கட்டுக்கடங்காத காளை என் ஒரு நிமிடம் பிரிவில் கண்ணீர் வடிக்கையில் உலகை வென்ற மகிழ்ச்சியில் உன்னிடம் சரணடைகிறேனடா.....

ஆள்பவன் என்ற ஆளுமையில் இல்லாமல் இருவரும் மனதோடு மனம் ஒத்து முத்தாய் பத்து செல்வம் ஈன்றெடுக்க வேண்டுமடா...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now