என்னவள் என்மீது கொண்ட காதல்
நான் அறியேன் (அம்மா).....உன் மீது நான் வைத்திருக்கும் நேசம்
வானளவு என்று சொன்னால்......
நீ என் மீது கொண்ட நேசம் சொல்லில் அடங்காமல் வளர்கிறது என்கிறாய் ....ஒரு செடியில் பூத்த நான்கு மலர்களையும்
ஒரே போல் வளர்த்தாய் பூக்கள் சேர போகும் இடம் வேறு என அறிந்தும்
ஆசையை வளர்த்தாய் ....ஒரு பூ மட்டும் சேரும் இடம் போகாமலே
உதிர்ந்த போது உன் வேதனை போக்க
வழி தெரியாமல் தவித்தேன் ..ஆனால் நீயோ மற்ற பூக்களின் தேவை
அறிந்து உன்னை நீயே தேற்றி கொண்டாயே....இந்த அன்புக்கு நான் என்ன செய்து ஈடுசெய்வேன் .....
ஆண்டுகள் கடந்தாலும் உன் அன்பு மாறவில்லையே...
உன்னிடம் இருக்கும் அத்தனையும் நான்கு மலர்களுக்கு கொடுத்து இன்று
மூன்றை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறாயே.....உன் வேதனை மலர்களை தாக்கவேண்டாம் என்ன நினைத்து தனிமையில் வாடுகிறாய்
அது அறிந்து இன்று கையால் ஆகாமல் இருக்கிறேன்...இப்பேற்பட்ட உன அன்பை நான் சொல்ல
வார்த்தைகள் தான் உண்டோ ..என் விடியலுக்காக நீ தூக்கம் தொலைத்தாய்
என் தேவைக்காக உன் தேவைகளை
மாற்றி கொண்டாய் .....என் ஆசைகளுக்காக உன் ஆசைகளை மறந்தாய்........
நான் எதிர்பார்ப்போடு எதுவும் வேண்டும்
என்றால் நீ எதிர்ப்பே இல்லாமல் செய்தாய்..உனக்கு பிடித்த அனைத்தையும் நீ ஈன்றெடுத்த மகவுகளுக்காக உன் ஆசைகள் அத்தனையும் தியாகம் செய்தாய் .....
சிறிதாக என் முகம் வாடினாலும்
உன் மனம் அதை படித்துவிடும்
எப்படி மறைத்தாலும் இதில் மட்டும் எனக்கு
தோல்வியே கிடைக்கிறது .....அம்மா நமக்காக பிறந்த தேவதை
உன் போன்ற கடவுளை இதுவரை
கண்டதில்லை எந்த சிலையிலும்....
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....