😍100😍

101 21 75
                                    

இரவில் நான் காணும் கனவின்
பதிலாய் உனை நேரில் கண்ண்டுவிட ஆசை...

நட்சத்திரம் எண்ணி கொண்டு உனக்காக காத்திருக்க ஆசை..

நம் சந்திப்பு பின் நிலவோடு அல்லாமல் நீ எனை மட்டும் ரசித்திட ஆசை.....

வர்ணிக்க முடியா உன் விழிகளை பார்த்து கொண்டே பேச ஆசை...

ஜன்னலுக்கு வெளியே தென்றலை நிறுத்தி வைக்க ஆசை...

உனை தீண்டி செல்லும் உரிமை எனக்கு மட்டுமே என தென்றலுக்கு உணர்த்திட ஆசை..

உன் கரம் பிடித்து கடல் மணலில் கவி பாட ஆசை...

உன் குரலோசை கேட்டு நான் ரசித்திட அலையின் சத்தத்தை கணநேரம் நிறுத்திவைக்க ஆசை...

உன் உதடுகள் பிரித்து பேசும் காதல் வார்த்தை கேட்டிட ஆசை...

காலம் கடந்த பின்னும் காதல் உயிர்ப்புடன் பிறந்திட ஆசை...

உன்னோடு காரணமின்றி சண்டை பிடித்திட ஆசை.....

உன் கோபம் ரசித்திட ஆசை அதிலும் உன் பொய் கோபம் மொத்தமாய் ரசித்திட ஆசை....

தினமும் விடியலில் முத்தத்தால் காதல் உணர்ந்திட ஆசை...

மௌனமொழியில் உன் மறுமொழி படித்திட ஆசை...

உன் காதல் மட்டுமல்ல  உன் சிறு கண்ணீர் கூட எனக்கே சொந்தமாகிட ஆசை...

என் கவிதையின் மொத்த வடிவமாய் நீ மட்டும் இருந்திட ஆசை...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now