என் அன்பனே

197 22 61
                                    

பனிரெண்டு  வருடத்திற்கு  ஒருமுறை  தான்
குறிஞ்சி பூ  பூக்குமாம்
யார்சொன்னது நான் காண்கிறேனே 
தினமும் உன் வருகையில்   ......

இசையில் ஏழு   ஸ்வரம் தான் உள்ளதாம் 
நான் கண்டேனே   எட்டாவது ஸ்வரமாக உன் புன்னகையை  .....

சிப்பிக்குள் இருக்கும் முத்து போல் உன் வார்த்தைகள் என்றாவது தான் சிதறுகிறது 
பத்திரப்படுத்துகிறேன் ஒவ்வொன்றையும்  முத்து  மாலையாக  கோர்க்க  .....

உலகில் சிறந்த மொழி எது என யோசித்தேன்..
உன் வருகையில் என் விழி தானாக மூடி என்னை நாணம் கொள்ள செய்யும் உன் கண்களின் மொழியை விட சிறந்தது வேற என்ன இருக்க முடியும்....

நீ என்னை கடந்து செல்லும் ஒருநொடியில்
ஒருயுகம் போல் தோன்றுகிறதடா.....
ஒற்றைவார்த்தை பேசிவிடலாம் என நினைக்கையில் உன் விழி என்னை பித்தம்  கொள்ள செய்யுதடா....

உலகின் ஏழு அதிசயத்தை காண ஆசைப்பட்டேன்... அதை விட மிக பெரிய அதிசயமாய் நீ உன் காதல் கொண்டு வந்துவிட்டாய்...இன்று இந்த அதிசயம் கானவே இரு விழி போதவில்லையே.....

யார் சொன்னது பெண் மட்டும் தான் தேவதை என்று நான் கண்டுவிட்டேன் ஆண் எனும் அழகான தேவதையை உன் உருவில்..... என் அன்பனே......

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now