காதலாலே என்னை முழுதாய்
உன்னக்குள் மூழ்கடிக்கும்
ஆழி நீயடா...உன் காதலோடு உன் நெஞ்சுக்குழியில்
காதல் ராகம் மீட்டும் யாழி நானடா...உன் இதழ்கள் சிந்தும் புன்னகை
முத்துகளை சிதறாமல் என்
இதழ்தனில் முத்தங்களாய்
ஏந்திக்கொள்ள வேண்டுமடா..உன் முகம் பார்த்து நான் மலர்ந்து
என் முகம் கண்டு நீ மயங்கி மனதோடு
காதல் கோலம் போட்டு உறவாலே
இணைத்திடவேணுமடா..கண்ணின் கரு மையாய் இதழின்
சாயமாய் உதட்டின் புன்னகையாய்
என் துணையாய் என்றும்
நீ வேண்டுமடா...உன்னோடு நிலவில் போய் வாழ
ஆசை இல்லையடா என்றும் என்
அருகில் வாழ்வின் மெய் சொந்தமாய்
நீயே வேண்டுமடாமலர் சூடம் நேரம் மனதில் உன்
நினைவு சிரிப்பு சாரலில் சிந்தும்
மழையில் தென்றலாய்
உன் தீண்டலடா... ..ஒரு நொடியும் உனை பிரியாது உன்னை அணைத்துக்கொண்டு வசந்தமான வாழ்க்கை வாழ வேண்டுமடா...
ஆசையோடு மாமன் போட போகும்
மாலை என்றோ என்று காத்திருக்கிறேன் அந்நாளுக்காக என்வசம் வந்து
பூச்சரம் சூடடா...
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....