கல்யாண கனவு

254 29 76
                                    

மாலை மாற்றி
மாங்கல்ய
முடுச்சிட்டு
நடுவகிற்றில்
திலகமிட்டு
மெட்டி
போட்டு
என்னை
உன்னவளாக்கி
கொண்டு

என் உள்ளம்
முழுதும்
கண்ணாளன்
நினைவை
சுமந்து
கொண்டு
உலகம்
மறந்து
உன் மார்பில்
உறங்கி

விடிந்தும்
விடியாத
வேலையில்
உன் காதல்
யுத்தம்
தாங்காமல்
உனக்குளே
புதைந்து
மீண்டும்
ஒரு காவியம்
படைத்து

புது தாலி
மின்ன புது
பொலிவுடன்
வரும்
வேளையில்
என்னை
சீண்டிக்கொண்டே

என் முந்தானை
இழுத்து நீ
செய்யும் செல்ல
குறும்புகளில்
என்னை
மறந்து
உனை
ரசித்து

தம்பதிகளாய்
வெளியில்
செல்கையில்
மற்றவர்
கேலி பேச
என் வெக்கம்
கண்டு நீ
பூரிப்படைய

உன் விழி வீச்சு
தாங்காமல்
நான் தலைகுனிந்து
உன்னுடன்
சேர்ந்து நின்று
கைகோர்த்து
உன் கைவளைவில்
அடைந்து

நீ என்னவன்
என்று
கர்வமாய்
சொல்லிட
ஆசையடா.... 

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now