பார்க்கும் திசையெல்லாம்
உன் முகம் கண்டு....நடக்கும் வழியெல்லாம்
உன் கால் தடம் உணர்ந்து
என் கால் தடம் பதித்து...நிஜமாய் உன் நிழலில்
நிழலாடி நித்தமும்
உன் நினைப்பில் கரைந்து....நான் தாங்கும் வலிகள்
எல்லாம் உன்னுடன்
சேர்ந்து உன் அன்பில்
வலிகள் மறந்து ...என் நெஞ்சத்தில் உனை
சுமந்து என்றும்
உன் நேசத்தில் உருகி...எனக்குள் உன் அன்பின்
உதயம் என் அஸ்தமனம்
வரை என்னுள் வாழ்ந்து.....
அன்பால் இணைந்திட
வேண்டுமடா... .கோபம் என்னும் தீ நமக்குள்
பிரிவு என்ற வார்த்தை
கொண்டு வந்தால்
அது பிரிவின் தொடக்கம்
இல்லாமல் என் முடிவின்
துவக்கமாய் இருக்குமடா.... .
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....