எது மகளிர் தினம்??

80 19 18
                                    

உலகம் போற்றும் உன்னதமான வார்த்தை தாய்மை...

தாய்மைக்கு தலையானா முதன்மை பெண்மை...

அன்றைய நாளில் பால்ய திருமணம்...

அதுவும் அரைகுறையாய் போனால் உடன்கட்டை ஏறுதல்...

இன்று பால்ய பலாத்காரம்
பாலியல் வன்கொடுமை
பாதுகாப்பு இல்லா உலகம்
உடன்பிறப்பையும் நம்ப
முடியாத காலம் !!!

எல்லாம் அறிந்தும் ஏதும்
செய்யாத ஆண்/ பெண்....

திருமண பந்தம்....
சிலநேரம் விருப்பம் இல்லாத இரவுகள்...
சிலநேரம் சாராயநெடியோடு
சில இரவுகள்..

மாதத்தில் மூன்று நாள் வலியோடு வலிமை கொண்டு கடக்கும் மூன்று யுகமாய்...

எங்கோ ஏதோ ஒரு பெண் சிதைந்த பின் ஆயிரம் கவிகள்,,, ஆயிரம் கேள்விகள் எழுப்ப நினைக்கிறோம்.....

சிதைக்கும் முன்னே சிந்திப்பவர் இங்கு இல்லையோ...??

இல்லை சிதைத்தவரை உடல்நடுங்க அவர்களை வதம் செய்து சிதைக்க யாரும் இல்லையோ...???

பெண்கள் நம் நாட்டின் கண்களாம்
ஏனோ அவர்களின் சுதந்திர விழிகள் கண்கட்டி  உறங்கி கொண்டே இருக்கிறது...

பெண்களின் உண்மை நிலை எழுத தொடங்கியதும்....
இன்றைய நாள் மறந்து போனேனே......

மங்கை அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் கூற வேண்டும் அல்லவா?? ?

தாயகம் போற்றி பாடிய பெண்கள் இன்று சிறு நிசப்தமான இரவை பயமின்றி கடக்க படாது பாடு படும் போது எதற்கு மகளிர் தின வாழ்த்து மட்டும்???

மகளிர் அனைவரும் மனதோடு சுதந்திரமாய் நிறைவோடு அனைத்தையும் இவ்வுலகில் கடக்கையில் சொல்ல சொல்லி என் மனம் சொல்கிறதே...
அதுவரை இத்தினம் கொண்டாட மனம் ஒப்பவில்லையே !!!!

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now