களவாடிய பொழுதுகளும்
உறவாடிய இரவுகளும்...
உறங்காத விழிகளும்...
பேசாத நிமிடங்களும்...
மறக்காத நினைவுகளும்...
மறுக்காத வார்த்தைகளும்..
பிரியாத நிமிடங்களும்...
நொடி நேர பிரிவுகளும் ...
நீ கொள்ளும் கோவ பார்வையிலும் ....
என்னை திட்டி பேசுவதிலும்....
அதை குறைக்க நீயே சமாதானம் செய்வதிலும்....
என் செல்ல சிணுங்கலை ரசிப்பதிலும்...
என் மனம் கவர்வதிலும்....
உன் மனதை வெல்வதிலும்....
என் வலிகளில் நீ வாடுவதிலும்....
உன் துன்பத்தில் நான் அழுவதிலும்...
நான் துவண்டநேரம் என்னை
தூக்கி நிறுத்துவதிலும்......உன் வெற்றியில் நான் களிப்படைவதிலும்.....
போராடி காதல் முத்திரை
பதித்ததிலும் ...அதை வென்ற அடையாளமாய் என் கழுத்தில் மூன்று முடுச்சு நீயே போட்டதிலும்.....
அந்த நிமிடம் கூட என் ஆனந்த
கண்ணீரை நீ துடைத்ததிலும்.. .தனியாக ஓர் அறையில் இருவரும்
தனித்து இருந்திருந்தாலும் திருமணம் முடிந்து நான் கொண்ட பயத்திலும்...என் மனம் அறிந்து நீ புரிந்து
நடந்ததிலும்....நாள் தள்ளி போனதை உன்னிடம் சொன்னதிலும்....
அதை கேட்டு புரியாமல் நீ
முழித்ததிலும்...நொடி நேரம் நின்று அதை புரிந்து நீ அடைந்த மகிழ்ச்சியிலும்...
மசக்கை காலத்தில் நான் தேவை இல்லாமல் படும் கோபத்தை நீ
பொறுத்து என்னை தாங்கியதிலும்..சீமந்தம் முடிந்து பிறந்த வீடு போகையிலும்....
பிரிவு தாங்காமல் வழி அனுப்பி விட்டு நட்டநடு ராத்திரியில் நீ என்னை காண வந்ததிலும்...
நம் பிள்ளை உலகில் ஜீவனிக்கும் நேரம் என் வேதனையில் நீ துடித்ததிலும்...
பிள்ளைக்கு நம் விருப்ப படி பெயர் சூட்டி மகிழ்ந்ததிலும்....
பிள்ளை ஒன்று போதும் என்று நீ செய்த பிடிவாதத்திலும்.....
உன்னை சமாளித்து சம்மதிக்க வைக்க நான் பட்ட பாட்டிலும்...
இன்று நாம் வாழும் இனிமையான இல்லறத்திலும்....
குறையாத ஒன்று நீ என்னை
காதலிப்பதும்.....நான் உன்னை காதலித்து கொண்டே இருப்பதும்....
என் காதல் கள்வனே.....
ESTÁS LEYENDO
ஆசைகள் ஆயிரம்
Poesíaமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....