யாரவன்

81 17 148
                                    

என் எண்ணங்களின்
ஊற்று அவன்..

என் மனதை பறிக்க
போகும் மாயவன்..

என் ஏக்கத்தை மொழிபெயர்க்க
வருபவன்...

எனை   மொத்தமாய் அவனுக்குள்
ஆட்கொளப்போபவன்....

என் மௌனத்திற்கு பொருளாக
மாறப்போபவன்...

இரவினில் தென்றலாய் தனிமையில் இனிமையாய் ஒளிரபோபவன்..

உதடுகள் சொல்ல மறுப்பதை என் முகம் பார்த்து தெரிந்துகொள்ள போபவன்..

மணவறையில் என் கரம் கோர்த்து
நான் உனக்கானவன் என  உணர்தபோபவன்..

நாள்தோறும் சேட்டை செய்து என்னிடம் குழந்தையாக மாறப்போபவன்...

என் துன்பம் அனைத்தும் மறக்கடித்து
எனை தாங்கப்போபவன்....

என் ஆசை நிறைவேற்ற தந்தைக்கு
நிகராக வர போபவன்...

வாழ்க்கையின் உயரங்களை
அடைய இனி என்னோடு
பயணிக்கபோபவன்..

என்  உயிர்   உள்ளவரை
அவன் காதலை எனக்குள்
உணர்தபோபவன்..

நரை விழுந்து என் கடைசி மூச்சு
துடிக்கும் வரையிலும் என் உயிருக்குள் உயிராக போபவன் அவனே என்னவன்...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now