கோபம்

81 18 27
                                    

நீ பேசிய வார்த்தை யாவும் புயலாய் தாக்கி என்னை  கோபம் கொள்கையில் உன் கண்ணீர் கண்டால் மட்டும் காற்றில் மோதி விழும் இலையைப்போல் உதிர்ந்து விடுகிறது என் கோபம் முழுதும்..

எனக்குள் இருக்கும் அனு ஆயுதம் என் கோபம் உன் கோப வார்த்தைகள் என்னுள் போர்தொடுக்கயில் தாக்க மனமின்றி என் ஆயுதத்தை தீயில் இடுகிறேன் உன் அன்பு முறிந்து விடக்கூடாது என...

திடீரென நடந்த கலபரத்தில் கோபம் தலை தூக்கி உனை அடக்கி ஆள முற்பட்டேன் ஆனால் முந்தி கொண்டது என் காதல் மொழி தெரியாமல் நடந்து விட்டது மறந்துவிடு கண்ணே என.....

முன்கோபம் இவ்வளவு ஆகாது என பலர் கூறியபோதலம் நான் இப்படி தான் என விலக முடிந்த என்னால் ஏனோ உன்னிடம் மட்டும் கோபம் எல்லாம் விட்டு மௌனத்தை கடைபிடிக்கிறேன்.....

நமக்குள் இனி ஏதுமில்லை என நீ கூறி சென்றபோது மனம் வலிக்கவில்லை கண்ணீர் துளிர்க்கவில்லை...  உதறி போன வேகத்தில் வந்து என்னை நீயே அணைப்பாய் என நான் அறிவேனே......

உன்மீது எனக்குள் கோபம் இருந்தும் உன் விழி தீண்டுகையில் எனை மறந்து ஒவ்வொரு நொடியும் ரசிக்க தூண்டுதே உன் அழகான கோபம் எனக்கே எனக்கானதென்று....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now