மன்னவா என் கணவா

140 16 215
                                    

சண்டையிட்டு பேசாமல் இருக்கையில் உறக்கத்தில் என் தலைகோதி ஒற்றை முத்தம் பதித்து எனை அணைத்து கொள்ளும் அழகை ரசிக்கவே உன்னிடம் ஆயிரம் முறை சண்டையிட தோன்றுமே
என் கள்வனே...

உன் விழியால் எனை கடத்தி உன் மொழியால் போர் தொடுத்து இன்று என் உறக்கத்தை பறித்து நீ அழகாய் நிம்மதியாக உறங்குகிறாயே என் மார்பில்  முகம் புதைத்து என் ஆசை கண்மணியே...

முடிவில்லா வாழ்க்கையில் தினம் வரும் விடியல் போல் உன் அன்பும் தொடங்கி கொண்டே முடிவில்லாமல் நீண்டு  உன் ஆழமான காதலோடு காலங்கள் கடந்து விழிமொழி படித்து வாழவேண்டும்டா  ...

என் முடிவு நாள் நெருங்குகையில் கூட உன்மீது கொண்ட காதல் காட்டாறு வெள்ளம் போல் கரை கடந்து மடை திறந்து என்றும் மகிழ்வோடு உன்னோடு வாழ இரவின் முடிவில் மீண்டும் இதமாய் தொடங்குமடி..

சிப்பியின் முத்துபோல் என் அன்பால் உனை மூடி என் கவிதைகளின் தலைவனாய் என் காதலின் நம்பிக்கையாய் என் இன்பத்தின் ஊற்றாய் என் வலிகளுக்கு வழியாய் என்றும் விளங்கும் என் நாயகன் நீயே....

கண்ணின் மையில் காதல் காந்தம் கொண்டு எனை உன்பின்னால் இழுத்து என் ஆயுள் வரை தீர காதல் தாகத்தின் ஆசையாய் என் எண்ணங்கள் முழுதும் உனை பற்றியே நினைக்க வைத்து என் கிறுக்கல்களை கவிதைகளாய் மாற்றிய என்னவள் நீயே...

மௌனமாய் இருக்கிறேன் மெய் சிலிர்த்து போகிறேன் உன் நினைவோடு ஒன்றும் தோன்றாமலே போகிறது உன் காதல் ஒன்றை தவிர என் மனதையே என்னிடம் இருந்து பறித்து அதில் சிம்மாசனம் இட்டு ஆட்சி செய்கிறாய் எனை நானே மறந்து போனது கூட தெரியாமல் இருக்கிறேனடா உன்னிடத்தில் ....

ஒன்றும் புரியாமல் தவிக்கிறேன் உன் காதலோடு ஒன்றி உன் இடையில் எனை தொலைத்து என் வாழ்நாளில் எதிர்நோக்கா சொர்கமாய் என்னிடத்தில் சேர்ந்து உன் வார்த்தையெல்லாம் மெல்லிசையாய் காதில் ஒலிக்கிறது என்னையே இழந்து தவிக்கிறேனடி  உன்னிடத்தில்....

நித்தம் நித்தம் நம் அன்பில் மலர்ந்து காதல் காவியம் படைத்து உயிரோடு உயிராய் உணர்வோடு கலந்து சிறு நேர தனிமையில் ஏங்கி காணும் நேரம் கண்ணால் பிரிவின் வலி புரிந்து என்றும் இதே காதலோடு வலம் வருவோம் காதலின் காதலே...

Nenga apo sona title crt ah niyabagam vachu potutena seekanama.... Eeeee....UmaThirunavukarasu

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now