அழகான வாக்கியத்தின்
அதிசயமான சொல் இவளோ !!!!!
காற்றின் மொழிகளில்
கவிதையின் ஊற்று இவளோ !!!!!!!
அருவியின் சாரல் போல் மனதில்
தோன்றும் மழையின் தூறல் இவளோ !!!!
கண்கள் கொண்டு மொத்த உயிரையும்
துடிக்க வைக்கும் மின்வெட்டு இவளோ !!!!!
சிரிக்கும் சிரிப்பில் அழகாய்
சித்தகரிக்கும் அர்த்தம் இவளோ !!!!!!!!!
மனதில் தோன்றும் எண்ணத்தின்
மகிழ்ச்சின் ஆசை இவளோ !!!!!!!!!!!!!!!
பேசாத மௌனத்தில் பேரின்பம்
கொடுக்கும் பேதை இவளோ !!!!!!!!!
சிந்தனையில் தோன்றும் சிறப்பான
நினைவுகளின் தேன்மழை இவளோ !!!!
துடிப்பான பேச்சில் மதிமயங்க
வைக்கும் மழலை இவளோ !!!!!!
விளக்கம் பல கொடுத்தாலும் சொல்லில்
அடங்காத சொர்கத்தின் வாசல் இவளோ !!!!!!!
தினம் தினம் புதிதாய் பிறக்கும்
மலர்களின் பிறப்பிடம் இவளோ !!!!!!!
எல்லை இல்லா என் வாழ்வின்
ஆசைகளில் இவள் மட்டும் போதுமென நினைக்க வைத்த பொக்கிஷம் இவளோ !!!!!!
கண்போரெல்லாம் காதல் கொள்ள
தூண்டும் கபடமற்ற தேவதை இவளோ !!!!!!!
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....