காதல் கணவா

152 30 77
                                    

அறிமுகமே இல்லாத உன்னை அனு
தினமும் எதிர்பார்க்கிறேன்....

உன்னை பார்க்காமலே  உனக்காக என் மனதில் இடம் கொடுத்துவிட்டேன் ...

உயிராய் உன்னையே நிதமும் நினைத்து ஏங்குகிறேன்...

வானம்பாடி பறவையாய் சுற்றி திரிந்த நான் இன்று உன் வரவை எதிர்நோக்குகிறேன்.....

புதுமையான உணர்வு புதிதாய் உனக்காக
புரியாமல் நடக்கிறேன்..

கால்கள் எட்டு வைக்க மறுக்கிறது எதிர்நோக்கி நீ வருகிறாயோ   

நெற்றி வகுடு எடுக்கையில் உன்னை பற்றி நினைக்கிறன்... நீ யாரென தெரியாமலே...

நான் என்ன சொன்னாலும் கேட்கும் மனது இன்று ஏனோ உன்னை கேட்கிறது....

யாரென அறிந்திருந்தால் கள்ள பார்வையால் பார்த்துவிடுவேன்...

நீ மறைந்து இருந்து கண்ணாம்மூச்சி ஆடுகிறாய்...

உன் கை சேர கை நீட்டுகிறேன் இன்னும் கை கோர்க்க முடியவில்லை...

என் கை வந்து சேரடா என் அன்பு கணவா...

தவியா தவிக்கிறேன் என் தவமாய் வந்து சேரடா...

தண்ணிக்குள் இருக்கும் மீனாய் துள்ளி திரிந்த நான்..

தரையில் கிடக்கும் மீனாய் துடிக்கிறேன்... உனக்காக......

உன் கையால் என் கழுத்தில் ஏற போகும் கருகமணிக்காக இன்று கவிதை எழுதி தவிக்கிறேன்...

என்று என் கை வந்து சேர்வாய் காதல் கணவா..

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now