🙊🙈🙈🙈🙊

97 15 59
                                    

காகித பக்கம் அனைத்திலும் கவிதை என்ற பெயரில் கிறுக்குகிறேன் உனக்காக...

எனை மறந்து தனிமையில் சிரிப்பதென எப்போதும் ஏதோ சிந்திப்பதென இதுதான் காதலா?

எப்போதும் என் தனிமையில் சுகமாய் மாற்றுகிறது உன் மீது கொண்ட காதல்...

ஏனோ என் கண்கள் உன்னை தேடி அலைகிறது ஆனால் நீ இன்னும் என்னை காக்க வைத்து ஏங்க வைத்து எங்கோ ரசித்துக் கொண்டிருக்கிறாய்....

என் ஆசை போல் எங்கோ நீயும் எனக்காய் காத்திருப்பது போல் எனக்குள் ஒரு எண்ணம் வந்து செல்கிறது.....

என் காதலே உன்னை இப்பொழுதே காண  வேண்டுமென்று தேடி அலையவில்லை ஆனால் எனக்காய் நீ இருப்பதை காண நினைக்கிறேன்..

எனக்குள் காதல் இல்லை உன் பெயர் அறியவில்லை உன் மீது இருப்புயில்லை
மனதில் காதல் ஆசையில்லை ஆனால் எனையின்றி வேரறும் உனக்கில்லை கனவிலும்....

வானில் அதிகமாய் வின்மீன்கள் இருந்தாலும் நிலவுக்கே மதிப்பதிகம் சுற்றி ஆயிரம் உறவிருத்தலும் உன் போல் ஆகாதே.....

இம்சை நீ செய்ய இதயம் படபடத்து காதோரம் ஏதோ பேச ஏதும் புரியாமல் சிலையென நிற்க சில்லென தென்றல் தீண்டி என்னிலை அறிந்து நீ சிரிப்பதை ரசிக்க சின்னதாய் ஆசை எனக்குள்....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now